நாட்டில் உள்ள எஃகு ஆலைகள், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, கடந்த ஜூலை 25ம் தேதி வரை மொத்தம் 2,30,262 டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகித்தன என்று மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கடந்த 2018-19ம் ஆண்டில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை எஃகு ஆலைகளின் திரவ ஆக்ஸிஜன் உ.ற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 2492-ஆக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 4102 ஆக அதிகரிக்கப்பட்டது.

