திங்கள், 2 ஆகஸ்ட், 2021

நாட்டில் உள்ள எஃகு ஆலைகள், மொத்தம் 2,30,262 டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம்.- மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங்


 நாட்டில் உள்ள எஃகு ஆலைகள்,  கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, கடந்த ஜூலை 25ம் தேதி வரை மொத்தம் 2,30,262 டன்கள்  திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகித்தன என்று   மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2018-19ம் ஆண்டில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை எஃகு ஆலைகளின் திரவ ஆக்ஸிஜன் உ.ற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 2492-ஆக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில்  நாள் ஒன்றுக்கு 4102 ஆக அதிகரிக்கப்பட்டது.

நாட்டின் 22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள எஃகு ஆலைகள், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, கடந்த ஜூலை 25ம் தேதி வரை, சாலைகள், ரயில்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம்   2,30,262 டன்கள்  திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகித்தன. எஃகு ஆலைகள் வாரியாக கொடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு இணைப்பு-1ல் உள்ளது. மாநில வாரியாக விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு இணைப்பு 2-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால், திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் உற்பத்தி குறைந்தது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக, எஃகு ஆலைகளில் ஆக்ஸிஜன் வாயு பயன்பாடு குறைக்கப்பட்டதால், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் எஃகு உற்பத்தி சுமார் 5 லட்சம் டன்கள் குறைந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக