வியாழன், 29 ஜூலை, 2021

இயற்கை மருத்துவம் பற்றிய இணைப்பான நைஸ் (NICE), சில உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை வெளியிட்டிருப்பதுடன், ஒரு சில ஊடகங்கள் அதனை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டுள்ளன.


 இயற்கை மருத்துவம் பற்றிய இணைப்பான நைஸ் (நெட்வொர்க் ஆஃப் இன்புளூயென்சா கேர் எக்ஸ்பர்ட்ஸ்), சில உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை வெளியிட்டிருப்பதுடன், ஒரு சில ஊடகங்கள் அதனை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டுள்ளன. கொவிட்-19 சிகிச்சைக்கான நெறிமுறையை வடிவமைப்பதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதானமாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகத் தவறாகவும், நியாயமற்ற வகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நைசின் இதுபோன்ற அனைத்து கருத்துக்களையும் ஆயுஷ் அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. மேலும் இது சம்பந்தமான தகவல்கள் வெளியிடப்பட்டது, முழுவதும் அடிப்படை ஆதாரமற்றது மற்றும் உண்மைக்குப் புறம்பானது.

குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கான எந்த விண்ணப்பங்களையும் நைஸ் முகமை ஆயுஷ் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. கொவிட்-19 தொற்றுக்கான சிகிச்சை, மேலாண்மை சம்பந்தமாக எந்த திட்ட முன்மொழிவுகள் நைஸ் முகமையால்சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், பல்துறை தொழில்நுட்ப ஆய்வுக்குழுவால் அந்த முன்மொழிவு முழுவதும் ஆய்வு செய்யப்படும். இந்த குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்த முகமையும் நெறிமுறைகளை வடிவமைப்பதாக உரிமை கோரக் கூடாது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஆணையின்படி இதுபோன்ற தவறான உரிமை கோரல்கள், தண்டிக்கத்தக்க குற்றமாகும்.

கொவிட்-19 மேலாண்மை, சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதாக ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் உள்ளூர் ஊடகங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக