செவ்வாய், 27 ஜூலை, 2021

கோமாரி நோய் மற்றும் Pesté des Petits Ruminants (PPR) ஆகிய இரண்டு நோய்களை முற்றிலும் ஒழிப்பத்ற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டம்.-- பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா

 

நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கோமாரி நோய் மற்றும் பெஸ்டே டெஸ் பெடிட்ஸ் ருமினண்ட்ஸ் (பிபிஆர்) ஆகிய இரண்டு நோய்களை முற்றிலும் ஒழிப்பத்ற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

கோமாரி நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் 2019-20-ல் இருந்தும், பிபிஆர் நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் 2021-22-ல் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் மத்திய அரசு நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 2030-ம் ஆண்டுக்குள் மேற்கண்ட இரண்டு நோய்களை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்குப் பொருளாதார அதிகாரத்தை அளிக்கும் நோக்கில், பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவ மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது.

நிறுவுவதற்கான செலவு, நிர்வாகம், பயிற்சி மற்றும் திறன் வளர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக ஒவ்வொரு மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புக்கும் பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

2019 பிப்ரவ்ரி 4-ம் தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றின் மூலமாக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மற்றும் மீன்வளத் துறைக்கு விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்தது.

2021 மார்ச் வரை கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் ஈடுபட்டுள்ள 6.63,055 விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்முனைதல் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் பிரதமரின் மத்சய சம்பட யோஜனா உள்ளிட்ட திட்டங்களை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறைகளை ஊக்கப்படுத்துவதற்காக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய பால்வள வளர்ச்சித் திட்டம், பால் பண்ணை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பால்வளக் கூட்டுறவு மற்றும் பால்வள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஆதரவு உள்ளிட்ட திட்டங்களும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக