வெள்ளி, 23 ஜூலை, 2021

ஆர்மெக்ஸ்-21 (ARMEX-21) எனப்படும் இந்திய ராணுவ பனிச்சறுக்கு பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார்.


 புதுதில்லியில் 2021 ஜூலை 23 அன்று நடைபெற்ற ஆர்மெக்ஸ்-21 எனப்படும் இந்திய ராணுவ பனிச்சறுக்கு பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார்.

நாட்டில் மற்றும் ராணுவத்தில் சாகச செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், இமயமலைப் பகுதிகளில் ஆர்மெக்ஸ்-21 நடத்தப்பட்டது. 2021 மார்ச் 10 அன்று லடாக்கில் உள்ள கரகோரம் பாசில் தொடங்கிய இந்த நிகழ்வு, 2021 ஜூலை 6 அன்று உத்தரகாண்டில் உள்ள மலாரியில் நிறைவுற்றது.

இதில் பங்கேற்ற குழு 119 நாட்களில் 1,660 கிலோமீட்டர்கள் பயணித்து, பனிப்பாறைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகளை கடந்தது. தொலைதூர பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுடன் குழுவினர் உரையாடினார்கள்.

இன்றைய நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், சவால் மிகுந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக குழுவினரை பாராட்டினார். சிலிர்ப்பான பயணம் ஒன்றை மட்டும் குழு நிறைவு செய்யவில்லை என்றும், அப்பகுதியில் செயல்படுவதற்கான ஒத்திகையாகவும் இது அமைந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பு படைகளின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டிய அமைச்சர், நாட்டின் பாதுகாப்பு வலிமையான கரங்களில் உள்ளதாக தெரிவித்தார். ஆர்மெக்ஸ்-21-ன் வெற்றி நாடு முழுவதும் புதிய தலைமுறை சாகசக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் பயணம் குறித்த சுவாரசிய தகவல்களை குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவணே உள்ளிட்ட உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக