இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பதே திமுகவின் நோக்கம்
ஜூன் 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திரு. ஆ.ராசா, “ 'பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசித் தீர்வு' என்ற பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் அண்ணா வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என பேசியுள்ளார்.






