வியாழன், 7 அக்டோபர், 2021

இந்திய அரசியலின் அதிசயம் பிரதமர் நரேந்திர மோடி, எளிய தேநீர் கடைக்காரரின் மகனாகப் பிறந்து இந்த உயரத்தை அடைந்திருப்பது சாதாரணமானது அல்ல! - வானதி சீனிவாசன்

இந்திய அரசியலின் அதிசயம் பிரதமர் நரேந்திர மோடி

இன்று அக்டோபர் 7. இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள்.  20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2001 அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் முதல்வராக திரு. நரேந்திர மோடி பொறுப்பேற்றார். குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகள் என்று இந்திய அரசியலில் மிக உச்ச பதவிகளில் தொடர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்து 21 ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அவருக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

குஜராத்  கலவரம் என்ற நெருப்பாற்றில் நீந்தி 2002, 2007, 2012 குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், 2014, 2019 மக்களவைத் தேர்தல்கள் என்று தனது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வென்று சாதனை படைத்தவர் நரேந்திர மோடி மட்டுமே. குஜராத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில், எளிய தேநீர் கடைக்காரரின் மகனாகப் பிறந்து இந்த உயரத்தை அடைந்திருப்பது சாதாரணமானது அல்ல. குஜராத் முதல்வராக இருந்தவர் ,

 2014 -ல் நாட்டின் பிரதமராக, தேசிய தலைவராக உயர்ந்தார் இப்போது உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார். இந்திய அரசியலில், உலக அரங்கில் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்னும் பல சாதனைகளை படைப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அரசியலில் நரேந்திர மோடி ஒரு அதிசயம். வாராது வந்த மாமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக