பள்ளிகளில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தனித்தேர்வர்கள் என்ற பெயரில் தனியாக 10, 12 ஆம் வகுப்பிற்குரிய பொது தேர்வை எதிர் கொள்ள வைக்கும் போக்கு தமிழகத்தில் இருக்கிறது. பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்றலில் சிறு பின் தங்கல் உள்ள மாணவர்களை தனித்தேர்வர்களாக்குகிறார்கள். அதோடு சென்ற ஆண்டு பொது தேர்வில் தேர்ச்சியை தவற விட்டவர்களும் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகிறார்கள்.
கொரானா பரவல் காரணமாக அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி தனித்தேர்வர்களை பள்ளிக்கல்வித்துறை கணக்கிலேயே எடுத்து கொள்ளவில்லை. பொதுவாக தனித்தேர்வர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதும், அவர்களின் தேர்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படுவதும் அவசியம். சென்ற முறை தேர்வு பெற தவறியவர்களுக்கும் , இந்த முறை தனித்தேர்வர்களாக பதிவு செய்தவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கி அவர்களையும் தேர்வு பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கு உடனடியாக நியாயமான தேர்ச்சி கிடைக்க உதவ வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக