திங்கள், 19 ஜூலை, 2021

கொவிட்-19 காரணமாக பள்ளிக்கல்வியை கைவிட்ட மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள்.- திரு தர்மேந்திர பிரதான்


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அடையாளம் காணப்பட்ட, பள்ளியில் இருந்து இடைநின்ற குழந்தைகள் குறித்த தகவல்களை திரட்டவும், பிரபந்த் தளத்தில் உள்ள சிறப்பு பயிற்சி மையங்களோடு அவர்களை இணைக்கவும் ஆன்லைன் முறை ஒன்றை பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவு துறை உருவாக்கியுள்ளது.

சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் இழ் 2021-22-ல் முதல் முறையாக 16-19 வயதுப் பிரிவில் உள்ள, பள்ளிக்கல்வியை கைவிட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக வருடத்திற்கு ரூ 2000 வரை நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய திறந்தவெளி பள்ளி அமைப்பு மற்றும் மாநில திறந்தவெளி பள்ளி அமைப்பு மூலம் அவர்கள் கல்வியை நிறைவு செய்ய இயலும். கொவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவு துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து 2021 ஜூன் 16 தேதியிட்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவு துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் கொண்டுவரப் படுவார்கள்.

பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நலத் திட்டங்களை கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவு துறை செயல்படுத்தி வருகிறது.

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ், பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளுக்காக ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உறைவிடப் பள்ளிகள் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலாயா எனும் பெயரில் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் 5726 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 5010 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயாக்கள் 6.54 லட்சம் பெண் குழந்தைகளுடன் செயல்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது, தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.

உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகை திட்டத்தில், 50 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக