திங்கள், 19 ஜூலை, 2021

பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் (INS TABAR) ஐஎன்எஸ் தாபர், அந்நாட்டு போர்க்கப்பலுடன் கடல்சார் பயிற்சியை நிறைவு செய்தது.


 பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தாபர், அந்நாட்டு போர்க்கப்பலுடன் கடல்சார் பயிற்சியை நிறைவு செய்தது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தாபர் போர்க்கப்பல் பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு பிரான்ஸ் கடற்படை கப்பல் எப்என்எஸ் அக்யுட்டைன்-உடன் இணைந்து பிஸ்கே வளைகுடாவில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் கடல்சார் கூட்டு பயிற்சியை முடித்தது. பி்ரெஞ்சு போர்க்கப்பலில் உள்ள என்எச் 90 ரக ஹெலிகாப்டர், பிரெஞ்சு கடற்படையின் 4 ரபேல் போர் விமானங்கள் ஆகியவையும் இந்த பயிற்சியில் பங்கேற்றன.

நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவது, துப்பாக்கி சூடு, வான் பாதுகாப்பு உட்பட பலவிதமான பயிற்சிகளை இரு நாட்டு போர்க்கப்பல்களும் மேற்கொண்டன. கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், இந்த பயிற்சி இருநாட்டு கடற்படைகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக