நாட்டில் விளையாட்டுக்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த இமயமலைப் பகுதி உட்பட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. விளையாட்டுக்கள் இந்தியா திட்டத்தின் கீழ், இமயமலைப் பகுதியில் ரூ.506.23 கோடியில் பல்வேறு வகையிலான 77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தத் துறைக்கான அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.




