SDPI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SDPI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஜூலை, 2021

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? - நெல்லை முபாரக்

 சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? - நெல்லை முபாரக்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கைதிகளுக்கு விரைவாக பிணை வழங்க தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க  தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த மே மாதல் சில முக்கிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிலையில், அந்த வழக்கின் நீட்சியாக மீண்டும் கடந்த ஜூலை 16 அன்று மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசால் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டும் சிறைக்கைதிகள் எவரும் அதனடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் தொடர்பான மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் நடவடிக்கையில் கால தாமதம் ஏன்?  

ஞாயிறு, 4 ஜூலை, 2021

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த பெரும் ஊழலில் இரு தரப்பிற்கும் பெரும்பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.- எம்.கே.பைஸி

 ரஃபேல் ஒப்பந்த ஊழலினை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் மூலம் விசாரிக்க வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த பெரும் ஊழலில் இரு தரப்பிற்கும் பெரும்பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் ‘தேசப் பாதுகாப்பு’ என்று கவசமிட்டு இந்த ஊழலை மறைக்க இயலாது. ஆகவே ரஃபேல் ஒப்பந்த ஊழல் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 8 ஜூன், 2021

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜூன் 10ல் தமிழகம் முழுவதும் SDPI ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜூன் 10ல் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்! - எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதன், 25 மார்ச், 2020

SDPI கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக நின்று களத்தில் செயலாற்றுவார்கள்


கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள்: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக நின்று களத்தில் செயலாற்றுவார்கள் - எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது;

கொரோனா வைரஸ் மூலம் பரவிவரும் கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை நோய் இந்தியா உட்பட உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் முழுமையான தடுப்பு மருந்து கண்டறியப்படாத சூழலில், இந்த வைரஸ் பரவலானது தும்மல், இருமல் மூலமாகவும், நோய் பாதித்தவரை தொடுதல் மூலமாகவும் பரவுவதால் நோய் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல் மூலம் மட்டுமே வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய், 24 மார்ச், 2020

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் - SDPI


கொரோனா பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு அரசு என்னென்ன விதிமுறைகளை விதித்துள்ளதோ அவை அனைத்திற்கும் கட்டுப்பட்டு, கொரோனா பரவலை தடுத்திட முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்கிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளையில் இந்த திடீர் உத்தரவு காரணமாக பொருளாதார இழப்புகள் ஏற்படும், ஏழை எளிய மக்களின் வருமானத் தடை காரணமாக அவர்கள் பெரும் இன்னல்களை அனுபவிக்க நேரிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனைக் கருத்தில்கொண்டும் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ரூ.3250 கோடிக்கு பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவிப்பு செய்துள்ளார். தமிழக முதல்வரின் அறிவிப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கின்றது.

தமிழக அரசு வழங்கவுள்ள உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாக அவர்களின் வீடுகளில், கைகளில் சென்று சேரும்படி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

திங்கள், 23 மார்ச், 2020

பிரதமருக்கு ஓரளவு விளம்பரம் கொடுப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படாது - SDPI


கொரோனாவிற்கு நிலையான நடவடிக்கைகள் தான் தேவை, 
அடையாள செயல்கள் அல்ல! - SDPI

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தேச மக்களுக்கு உரையாற்றியது ஏமாற்றமளிப்பதாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பேரழிவு ஏற்கனவே உலகளவில் 10,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துவிட்டது மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. மார்ச் 22, 2020 அன்று ஒரு நாள் “சுய ஊரடங்கு உத்தரவு” நம் பிரதமருக்கு ஓரளவு விளம்பரம் கொடுப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படாது என்று கட்சி தெரிவித்துள்ளது.

சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸிற்கு சித்தா மருத்துவ முறையில் தடுப்பு மருந்தை கண்டறியும் முன்னெடுப்புகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்! - SDPI


கொரோனா வைரஸிற்கு எதிராக பாரம்பரிய சித்தா மருத்துவ முறையில் தடுப்பு மருந்தை கண்டறியும் முன்னெடுப்புகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வலியுறுத்தல்.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் போர்க்கால நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு எல்லோரும் பாராட்டத்தக்க வகையிலான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசின் நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டுகின்றது.

வியாழன், 19 மார்ச், 2020

நீதிபதிகள் நீதித்துறையின் மதிப்பைக் குறைப்பதற்கு துணை போவது பரிதாபகரமானது - SDPI


முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்ற மேலவைக்கு நியமனம் உன்னதமான நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததற்கான சன்மானம்! - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டது என்பது, ரஃபேல் ஊழல் வழக்கு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பாபரி மஸ்ஜித் தகர்ப்பு உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகளில் உன்னதமான நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததற்கு பாஜகவால் வழங்கப்பட்ட சன்மானமாகும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு  முரண்பட்ட அபத்தமான, அநீதியான தீர்ப்பு வழங்கியபோது நாட்டின் மதச்சார்பற்ற சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிடப்பட்ட தீர்ப்பில், இந்துத்துவ அரசியலின் செல்வாக்கு மிகைத்திருப்பதை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டியதை அவர் நினைவுகூர்ந்தார்.

திங்கள், 16 மார்ச், 2020

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள்


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு திருச்சி - 15.03.2020 - பொதுக்குழு தீர்மானங்கள்

1.பேரா. க.அன்பழகன் அவர்கள் மறைவு - இரங்கல் தீர்மானம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகமூத்த தலைவரும், அதன் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு இந்த பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

நீதிக்கட்சி தொடங்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடன் இணைந்து சமூக அரசியல் களத்தில் வலம்வந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் திராவிட இயக்க கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

சட்டமன்ற உறுப்பினராக நீண்ட காலம் பயணித்தவர் பேராசிரியர் அவர்கள். சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும் செயல்பட்டுள்ளார்கள். 1977 தொடங்கி இறக்கும் வரை திமுகவின் பொதுச்செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த பேராசிரியர் அவர்கள், இந்தி திணிப்பு மற்றும் ஈழப்பிரச்சினை விவகாரத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர் ஆவார். திராவிட இயக்க வரலாற்றில் பின்னிப் பிணைந்த பேராசிரியர் அவர்களின் இழப்பு தமிழ் சமூகத்துக்கும் ஒரு இழப்பாகும்.

2. அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ), என்.ஆர்.சி., என்.பி.ஆர்-யை ரத்து செய்ய வேண்டும்:

குடியுரிமையை மத அடிப்படையில் வழங்க முடியாது. அவ்வாறு சட்டம் இயற்றுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 14க்கு முரணானது. சமயம், சாதி, பால், இனம், நிறம் அடிப்படையில் யாரையும் வேறுபடுத்தக் கூடாது என அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 14 குறிப்பிடுகிறது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 அதன் உயிர் நாடியான எந்த அடிப்படைக் கூறுகளையும் மீறும் வகையில் எந்தப் புதிய சட்டமும் இயற்ற முடியாது, அவ்வாறான நடைமுறை சட்டவிரோதம் என குறிப்பிடுகிறது. எனினும், அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக  மீறும் வகையில், மத ரீதியாக நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் திருத்தங்களை மேற்கொண்டு சட்டமாக்கியுள்ளது. ஆகவே மக்களை மதரீதியாக பிரித்துப் பார்க்கும் அரசியலமைப்புக்கு விரோதமான தவறான சட்டத்தை இயற்றியுள்ள மத்திய பாஜக அரசை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதோடு சிஏஏ, என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர்-யை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

வெள்ளி, 13 மார்ச், 2020

டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்கள் கைது! - SDPI கட்சி கடும் கண்டனம்


டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்கள் கைது! 
- எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி, டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் தேவையற்ற அடக்குமுறையையும், அவர்களின் கைது நடவடிக்கையையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி விடுத்துள்ள அறிக்கையில், டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது பர்வேஸ், செயலாளர் முஹம்மது இல்யாஸ் மற்றும் பலரை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்ததை அவர் கடுமையாக விமர்சித்தார்.

NPR நடவடிக்கைகளை தமிழகத்தில் ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே சிறந்த முடிவாகும்! - SDPI


என்.பி.ஆர். நடவடிக்கைகளை தமிழகத்தில் ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே சிறந்த முடிவாகும்! 
- தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் என்.பி.ஆர். மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்பை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக, செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், சட்டமன்ற தீர்மானம் மூலமாக அந்த அறிவிப்பு முதல்வரின் அறிவிப்பாக வெளிவர வேண்டும் என்பதே எஸ்.டி.பி.ஐ. உள்பட போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.

திங்கள், 9 மார்ச், 2020

டெல்லி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் - பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் - SDPI நெல்லை முபாரக்


டெல்லி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் - பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் - நெல்லையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். 

அரசமைப்பு விரோத சட்டமான சி.ஏ.ஏ.வுக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டம் எனும் பெயரில் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பெரும் இனக்கலவரத்தை ஆளும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நடத்தியுள்ளன.

கோவையில் இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் வேண்டுமென்றே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். - SDPI


மார்ச் 09ல் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 
நெல்லை முபாரக்

சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி,யை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களும் தன்னிச்சையாக ஆங்காங்கே தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தது.

ஆனால், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழக அரசு அது தொடர்பான விவாதத்தை கூட நடத்தவில்லை. இந்நிலையில் நாளை (மார்ச்.09) தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கத்தை போன்று வலுவான சட்டமன்ற தீர்மானத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் 68 கோடி பேர் திரண்டுள்ளனர் - SDPI நெல்லை முபாரக்


சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் 68 கோடி பேர் திரண்டுள்ளனர் - நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் உரை

நெல்லையில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், விசிக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ. வாசுகி, மதிமுக.வின் மல்லைலை சத்தியா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்! உண்மை அறியும் அறிக்கை


வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்! - SDPI மத்தியக் குழுவின் உண்மை அறியும் அறிக்கை
வடகிழக்கு டெல்லியில் அரசமைப்புக்கு விரோதமான சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக ஜப்ராபாத் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்திற்கு எதிராக, கபில் மிஸ்ரா தலைமையிலான பா.ஜ.க.வினர் கடந்த 23 ஆம் தேதி சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வன்முறையில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

புதன், 19 பிப்ரவரி, 2020

சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா? - SDPI


சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா? தமிழக முதல்வர் இறுக்கமான சூழலிலிருந்து வெளிவந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி

இதுகுறித்து எ.ஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பிப்.19ல் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்! லட்சக்கணக்கில் அணி திரள்வோம்! - SDPI கட்சி அழைப்பு


சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.19ல் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்! லட்சக்கணக்கில் அணி திரள்வோம்! - SDPI கட்சி
 M.நிஜாம் முகைதீன்  அழைப்பு

அரசமைப்பு சட்ட விரோத சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகவும், அந்த கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 2 மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்


இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும் - நெல்லை முபாரக்

காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல் - அரசியல் தலைவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு: கண்டிக்கத்தக்கது - நெல்லை முபாரக்


காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல் - அரசியல் தலைவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு  கண்டிக்கத்தக்கது - நெல்லை முபாரக்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது - நெல்லை முபாரக்


தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது - நெல்லை முபாரக்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை மீத்தேன், ஹட்ரோ கார்பன் திட்டங்களின் மூலம் மத்திய அரசு தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசக்கார திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மீத்தேண் திட்ட எதிர்ப்புக் குழு, பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அதோடு டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.