வியாழன், 19 மார்ச், 2020

நீதிபதிகள் நீதித்துறையின் மதிப்பைக் குறைப்பதற்கு துணை போவது பரிதாபகரமானது - SDPI


முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்ற மேலவைக்கு நியமனம் உன்னதமான நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததற்கான சன்மானம்! - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டது என்பது, ரஃபேல் ஊழல் வழக்கு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பாபரி மஸ்ஜித் தகர்ப்பு உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகளில் உன்னதமான நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததற்கு பாஜகவால் வழங்கப்பட்ட சன்மானமாகும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு  முரண்பட்ட அபத்தமான, அநீதியான தீர்ப்பு வழங்கியபோது நாட்டின் மதச்சார்பற்ற சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிடப்பட்ட தீர்ப்பில், இந்துத்துவ அரசியலின் செல்வாக்கு மிகைத்திருப்பதை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டியதை அவர் நினைவுகூர்ந்தார்.

என்.ஆர்.சி. அடிப்படையில் அஸ்ஸாமில் மக்களுக்கு இடையூறுகளை கட்டவிழ்த்துவிட்ட இந்துத்துவ சக்திகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதியும் அவரே என்பதும் கருத்தில்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ஜனநாயகத்திற்கு எதிராகவும் மற்றும் நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையிலும் சங்கப்பரிவாரின் கட்டளைக்கிணங்க தீர்ப்புகள் வழங்கும் நீதிபதிகளுக்கு, பாஜக வழிநடத்தும் பாசிச ஆட்சி வழங்கும் பிரதிவுபகாரச் சன்மானம் என்பதற்கு இதுவே தெளிவான சான்றாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.  இத்தகைய செயல்பாடுகளில் கோகாய் போன்ற நீதிபதிகள் நீதித்துறையின் மதிப்பைக் குறைப்பதற்கு துணை போவது பரிதாபகரமானது என்றும் அவர் தனது அறிக்கையில் சாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக