திங்கள், 23 மார்ச், 2020

ஒன்றிணைந்து துயரங்களை கடப்போம்..! பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவரின் அறிக்கை :


ஒன்றிணைந்து துயரங்களை கடப்போம்..! பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவரின் அறிக்கை :

பெரும்பாலான மாநிலங்கள் மக்கள் நடமாட்டங்கள், போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன என்பதை நாம் அறிவோம். கொரோனோ தொற்றுநோயிலிருந்து நம் நாட்டைப் பாதுகாக்க சுகாதார அதிகாரிகள் அளிக்கும் அறிவுறுத்தல்கள் மிகவும் முக்கியமானவை. கொரோனோ தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றுவது உண்மையில் நமது தனிப்பட்ட மற்றும் சமூகப் பொறுப்பாகும்.


பெரும்பாலான மக்கள் வீட்டில் இருப்பதால், உங்களது நேரத்தை சுய வளர்ச்சிக்கு பயன்படுத்தவும். அறிவைப் பெறுவதிலும், பெருக்குவதிலும் அதிக நேரம் செலவிடுங்கள். இது நமது ஆன்மீக தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் ஆகும்.

சூழல் கருதி, தேவைப்பட்டால் அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் ஏழைக் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். ஏனெனில் அந்த குடும்பங்கள் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சுய ஊரடங்கு அதிக நாட்கள் தொடர்ந்தால் தினசரி கூலி தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும். உணவுப் பற்றாக்குறை மற்றும் பிற தேவைகள் காரணமாக நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த குடும்பங்களும் பாதிக்கப்படவில்லை என்பதில் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மருத்துவ நிவாரணப் பணி குறித்த விழிப்புணர்வு நமக்கு தேவை. அதற்கு சரியான மருத்துவ அறிவு தேவைப்படுகிறது. எனவே அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெற்று நமது உறுப்பினர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் நமது நிவாரணப் பணிகள் திறமையாக நடைபெறும்.

ஒரு சமூக இயக்கத்தின் பணியாளர்களாக நீங்கள் அனைவரும் சுய ஒழுக்கத்திற்காக பயிற்சி பெற்றவர்கள். இத்தகைய சூழ்நிலையில் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் நமது ஒழுக்கத்தைக் வெளிப்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ், நம் நாடும் உலகமும் இந்த சவாலை சமாளிக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும், ஒழுக்கத்துடனும், எச்சரிக்கையுடனும், அக்கறையுடனும் இருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக