செவ்வாய், 24 மார்ச், 2020

விதி 110-ன் கீழ் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வான்வழி அவசர கால சேவை ரூ.10 கோடி மதிப்பில் தொடங்கப்படும். - முதல்வர்


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை

வான்வழி அவசர கால சேவை
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடி சிகிச்சை மேற்கொள்ள துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வான்வழி அவசர கால சேவை ரூ.10 கோடி மதிப்பில் தொடங்கப்படும்.

மயிலாடுதுறை புதிய மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக "மயிலாடுதுறை" மாவட்டம் உருவாக்கப்படும்.

ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ்
தூத்துக்குடி மக்களால் "மக்களின் தந்தை" என போற்றப்படுபவரான ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.


மருந்தியல் தொழிற்பூங்கா
திருவண்ணாமலை- செய்யாறு தொழில் பூங்காவில் முதற்கட்டமாக சுமார் 650 ஏக்கர் பரப்பில் மருத்துவ மூலப்பொருட்கள் (ம) மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக மருந்தியல் தொழிற்பூங்கா, சிப்காட் நிறுவனத்தால் ரூ.770 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

ஜெ.ஜெயலலிதா வளாகம்
தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என பெயரிட்டு, அவ்வளாகத்தில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

ஆதிதிராவிட மாணவர்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை ரூ.900-லிருந்து ரூ.1000-மாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.1100 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

வெள்ளையத் தேவன் அவர்களுக்கு வெண்கலச்சிலை 
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தளபதியாக விளங்கிய திருநெல்வேலி சீமை தந்த தீரம் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவன் அவர்களுக்கு தூத்துக்குடி - வல்லநாட்டில் அமைந்துள்ள அன்னாரின் மணி மண்டபத்தில் முழுவுருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை
கரோனா, பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், சார்ஸ் போன்ற தொற்று நோய்களை தடுக்க கட்டுப்படுத்த மாநில அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக, தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையும், 3 மண்டல தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மதுரை - தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை,

Bio Safety Level -III நிலைக்கு ரூ.110 கோடி 
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தஞ்சை - செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானடோரியம் ஆகிய மருத்துவமனைகளும் சென்னை கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்திலுள்ள ஆய்வகத்தை Bio Safety Level -III நிலைக்கு மேம்படுத்தவும் ரூ.110 கோடி அளிக்கப்படும்.

பத்திகையாளர்கள் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம்
பணிக்காலத்தில் பத்திகையாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது பத்திரிகையாளர் நல நிதியத்தால் வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி ரூ.50000 லிருந்து ரூ.1 லட்சமாக 1.8.2018 முதல் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்ட நிலையில் தற்போது இந்த நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக