சனி, 21 மார்ச், 2020

110-ன் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பள்ளிக்கல்வி திட்டங்கள் - எடப்பாடி கே.பழனிசாமி

சட்டப்பேரவையில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பள்ளிக்கல்வி ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை 
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  வெளியிட்டார்.


கிராமப்புற மாணவர்களுக்கு 
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், உயர்கல்வித் துறை மூலம் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.

கால்நடை பன்முக மருத்துவமனை

ரூ.1.60 கோடியில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், ரூ.3 கோடியில் 5 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாகவும்,ரூ.1.20 கோடியில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.


கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை
 வணிக ரீதியில் மேற்கொள்ளும்

1,925 பயனாளிகளுக்கு 50% மானியத்தில் தலா 1000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க ரூ.14.73 கோடி வழங்கப்படும்.

 மீன் இறங்கு தளங்கள்

கன்னியாகுமரி - தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதற்கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடியிலும், ஹெலன் நகர், ராஜாக்க மங்களம் மற்றும் கொட்டில்பாடு கிராமங்களில் மீன் இறங்கு தளங்கள் ரூ.39.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்படும்.

நெல் சேமிப்பு கொள்கலன்கள் 

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 75000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் ரூ.225 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு கட்டடம்

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும் ரூ.17.87 கோடி மதிப்பில் கட்டப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக