செவ்வாய், 24 மார்ச், 2020

கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் - DR எல்.முருகன்


தமிழக அரசுக்கும் முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 - DR எல்.முருகன். பாஜக

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலகையே பயமுறுத்திக் கொண்டுள்ள கொரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸைக் கட்டுப் படுத்த நம் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து, தமிழகத்தில் தாங்கள் முழு வீச்சில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் அதற்காகத் தங்களுக்கும், தமிழக அரசுக்கும் மனதாரப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 

இந்த இக்கட்டைச் சமாளித்திடும் விதமாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு, ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்துத் கொடுத்தும், ஏழை எளியோருக்குத் தொடர்ந்து சேவைகள் செய்தும் பாரதிய ஜனதா கட்சி தொண்டாற்றி வருகிறது.

மேலும் இந்தக் கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ள பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயிரக் கணக்கான எமது தன்னார்வலர்கள் வருவாய், காவல், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட இன்ன பிற அத்தியாவசியமான அரசுத் துறைகளில் 24 மணி நேரமும் அரசுடன் இணைந்து சேவை புரிந்திடத் தயாராக இருக்கிறோம் என்பதனைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மானுட குலத்திற்கு விடப்பட்டுள்ள இத்தகைய சவாலை எதிர்கொண்டு நாம் அனைவரும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்பதுடன் இப்பணியைத் திறம்படச் செயல்படுத்தி வரும் தங்களுக்கும், தமிழக அரசுக்கும் முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக