திங்கள், 23 மார்ச், 2020

அங்கன்வாடி மையத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்படும் - எடப்பாடி கே.பழனிசாமி


சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சார்பாக பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன் - எடப்பாடி கே.பழனிசாமி

41 ஆயிரத்து 133 அங்கன்வாடி மையங்களில் சிறிய கட்டிட பராமரிப்புப் பணிகள், தச்சு வேலை, மின் மற்றும் பிளம்பிங் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,

சென்ற ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும், 10 ஆயிரத்து 888 அங்கன்வாடி மையங்களுக்கு 10 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் மேசை, நாற்காலி, இரும்பு அலமாரி போன்ற தளவாட சாமான்கள் வழங்கப்படும்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் 17 தற்போது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில்,  8 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3.23 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.


சென்னை , மைலாப்பூரில் 9 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமூக நல ஆணையரகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் "அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பும், 10 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

#பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் #மாணவர்களுக்கு #DTH இணைப்புடன் #LED தொலைக்காட்சிப் பெட்டிகள்,#மதராசா பள்ளிகளுக்கு இணைய வசதியுன் கூடிய #கணினிகள் - எடப்பாடி கே பழனிசாமி

#பாலியல் #வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு  வாழ்ந்து வரும் #மாற்றுத்திறனாளி #பெண்கள் மற்றும் #குழந்தைகளுக்கு இழப்பீடு திட்டம் - எடப்பாடி கே பழனிசாமி

சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் - எடப்பாடி K. பழனிசாமி


#ப்ளஸ்1, #ப்ளஸ்2 தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தமிழகத்தில் குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு ஊரடங்கைச் செயல்படுத்தி, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும்! - டிடிவி.தினகரன்

தமிழகத்தில் #கொரோனா_வைரஸ் எதிராக  #தமிழக_முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகள் #தமிழகமக்கள் நலன் காக்கும் வகையில்அமைந்துள்ளன. -ஜி.கே.வாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக