செவ்வாய், 24 மார்ச், 2020

சுங்க கட்டணம் வசூலிப்பதை அரசு தவிர்க்க வேண்டும். - டிடிவி.தினகரன்


சுங்கச் சாவடிகளில் நீண்டநேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது சுங்க கட்டணம் வசூலிப்பதை அரசு தவிர்க்க வேண்டும். - டிடிவி.தினகரன்

மார்ச் 31 வரையிலான ஊரடங்கு உத்தரவு இன்று மாலை ஆறு மணி முதல் தொடங்க இருப்பதால், சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் பயணமாகும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

இவர்களது சொந்த வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளால் சுங்கச் சாவடிகளில் நீண்டநேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தலை இது அதிகமாக்கவே செய்யும் என்பதால் இன்று முழுவதும் சுங்கக் கட்டணமில்லாமல் வாகனங்கள் விரைவாக வெளியேற அனுமதிக்க வேண்டும்.


இந்த விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியிருப்பதை மனதில்கொண்டு உரிய உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து பிறப்பிக்க வேண்டும்.

மக்களுக்கு சூழலை விளக்கி குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்துவதே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும் அத்தியாவசிய பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். நேரத்தில்

மேலும் கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகையையும் பழனிசாமி அரசு வழங்க வேண்டும். டெல்லியில் செய்திருப்பதைப் போன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் கட்சிகளும், மக்களும் அரசோடு இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கும் போது, பழனிசாமி அரசும் மக்களைப் பாதிப்பின்றி காப்பாற்ற, 'ஈகோ' பார்க்காமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக