செவ்வாய், 24 மார்ச், 2020

"கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3,250 கோடி" மக்கள் வழங்கும் நிவாரண திட்டம் முதல்வர் அறிவிப்பு



"கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3,250 கோடி"  மக்கள் வழங்கும் நிவாரண திட்டங்கள் முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு 
  • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.
  • அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.
  • குடும்ப அட்டைதார்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருந்தால் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்ந்து வாங்கி கொள்ளலாம்.
  • கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ரூ.3280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக, தலா ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
  • அம்மா உணவகத்தின் மூலம் சூடான சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.
  • அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும்முதியோர்களுக்கு தேவையான உணவினை அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கு" மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் "பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை" அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
  • எந்த வசதியும் இல்லாதோர் ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும்.
  • தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகர ஆணையருக்கும் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு. 
  • பதிவு செய்யப்படாத நடைபாதை வியாபாரிகளுக்கு, பொதுவிநியோகத் திட்டத்தில் ரூ.1000 ரூபாயுடன் கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
  • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக