சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: கையாலாகாதனத்தை மறைக்க கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள் ? - டிடிவி.தினகரன்
சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களிலும் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், கடவுளின் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா நோய் தாக்குதல் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கோவை பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வரும் நிலையில், வெளிமாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவு என்று கூறியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் என்று தெரியவில்லை