செவ்வாய், 6 ஜூலை, 2021

மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும்.- டிடிவி.தினகரன்


 மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். 

எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். 

இதேபோல் வடமாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையைக் கட்டி இருப்பது குறித்தும், 

இதற்காக  கடந்த ஆட்சியில் தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாக வெளியாகி உள்ள செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக