திங்கள், 11 மே, 2020

அமமுக- மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் சிந்தனையோடும் செயல்படுகிறார்கள் - டிடிவி.தினகரன்


அமமுக- மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் சிந்தனையோடும் செயல்படுகிறார்கள் - டிடிவி.தினகரன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி  மூட்டைகளில் சுகாதாரத்துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொது வெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலைத் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக (ஆண்கள்) செயலாளர் அமமுக தகவல் தொழிற்நுட்பப்பிரிவு திரு.முத்துக்குமார் அவர்களை காவல்துறையினர் அதிகாலையில் திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பகிர்ந்த ஒரு பதிவுக்காக திரு.முத்துக்குமாரைக் கைது செய்திருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் சிந்தனையோடும் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆட்சியாளர்கள் அதனால்தான் மக்களின் பாதுகாப்புப்பணிக்குக் கூட போதுமான காவலர்கள் இல்லாத இந்த நெருக்கடியான நேரத்தில், இதற்காக புதுக்கோட்டையில் இருந்து காவலர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட தூண்டுதலுக்கு இணங்கி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது காவல்துறையினரின் கண்ணியத்தைக் குலைத்துவிடும். எனவே, திரு.முத்துக்குமார் உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர் மீதான பொய் வழக்கையும் ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக