திங்கள், 18 மே, 2020

கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட "பாதுகாப்பு உபகரணங்களை" இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மு.க.ஸ்டாலின்


விவசாயிகள் மீது கவனம் செலுத்துக! - மு.க.ஸ்டாலின் அறிக்கை,

விளை பொருட்களை, ஊரடங்கு காரணமாக, உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் - விவசாயப் பெருமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அதிமுக அரசின் நிவாரணங்கள் விவசாயிகளுக்கு , விவசாயத் தொழிலாளர்களுக்கோ முறைப்படி சென்றடையாததால் - நிம்மதியிழந்து தவிக்கிறார்கள்.

டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக - குறிப்பாக, 2016 இல் - 20.9.2016; 2017 இல் - 02.10.2017; 2018 இல் - 19.7.2018; 2019 இல் - 13.8.2019 என மேட்டூர் அணை தாமதமாகவே திறக்கப்பட்டது!

தற்போது - அணையின் முழு கொள்ளளவு ஆன 120 அடியில், அடி நீர் இருக்கிறது. 90 அடி நீர் இருப்பு இருந்தாலே, ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். இப்போது கையிருப்பு நீர் இருந்தும், இதுவரை அரசு அணை திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

மேட்டூர் அணை திறப்பு குறித்து இப்போதே அறிவிப்பு வெளியிடுக! குறுவை விவசாயிகள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட உதவிடுக! ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும். விவசாயக் கடன் வசதிகள், வட்டி இல்லாமல், பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கும் ஏற்பாடுகள் வேண்டும்.

விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை தடையின்றி கிடைக்கவும்; விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட "பாதுகாப்பு உபகரணங்களை" இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக