முன்னணி ஆன்லைன் பயண முகவர்கள் (OTA கள்) பிரதிநிதிகள்
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் (பொறுப்பு)
திரு. பிரஹலாத் சிங் படேலை புதுதில்லியில் இன்று சந்தித்தனர்.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயண முகவர்கள் (OTA’s) குழு மத்திய வெளியுறவு அமைச்சர் (பொறுப்பு) சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேலை இன்று புதுதில்லியில் சந்தித்தது. இந்த சந்திப்பு ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றைத் திறப்பதற்கும், ஊரடங்கிற்குப் பின், விடுதி மற்றும் பயணம் தொடர்பான நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த நெறிமுறைகளை வழங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
உள்நாட்டு சுற்றுலாவில் தொடங்கி பயணத்துறையை மறுதொடக்கம் செய்வதற்கான அமைச்கத்தின் திட்டத்தை மத்திய அமைச்சர் பகிர்ந்து கொண்டார், மேலும் பயண முகவர்கள் முன்வைத்த திட்டங்கள் மற்றும் யோசனைகளையும் கேட்டறிந்தார்.

சுற்றுலா அமைச்சகத்தின் OTA 2018 வழிகாட்டுதல்களை எளிமையாக்கி, தொழில்துறை உந்துதல் மூலம் பெறப்படும், தர உத்தரவாதம் மற்றும் குறை தீர்க்கும் முறை மூலம் இயங்கும் சுயசான்றிதழ் கொள்கையின் அடிப்படையில் தாராளமயமாக்க சுற்றுலா மற்றும் கலாச்சார மாநில அமைச்சகத்துக்கு (பொறுப்பு) இந்தக் குழு கோரிக்கை வைத்தது.
கூட்டத்தில் சுற்றுலா அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர், மேலும் பயண முகவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த OYOஐச் சேர்ந்த ரித்தேஷ், மேக் மை டிரிப்பில் இருந்து டீப் கல்ரா, யாத்ராவைச் சேர்ந்த துருவ் சிங்ரி மற்றும் ஈஸி டிரிப் பிளானர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரித்திகாந்த் பிட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
பயண முகவர்களின் ஆன்லைன் நிறுவனங்கள், அவற்றின் வலைத்தளம் / இணையதளங்கள் மூலம் நுகர்வோர், இணையம் வாயிலாக பயணம் தொடர்பான பல்வேறு சேவைகளை நேரடியாகப் பதிவு செய்ய உதவுகின்றன. அவர்கள் 3 வது தரப்பு முகவர்கள், மற்றவர்களால் வழங்கப்பட்ட அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட பயணங்கள், ஹோட்டல்கள், கார்கள், விமானங்கள், விடுமுறைத் தொகுப்புகள் போன்றவற்றில் முன்பதிவுகளை மறுவிற்பனை செய்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக