திங்கள், 1 ஜூன், 2020

சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் 25வது இணையக் கருத்தரங்கு ‘எனது தேசத்தைப் பார்’ என்ற தொடரின் கீழ் ‘தீவிர சுற்றுலாப் பயணிக்கு வடகிழக்கு இந்தியா’

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை வெளிக்காட்ட, ‘எனது தேசத்தைப் பார்’ என்ற தொடரின் கீழ் ‘தீவிர சுற்றுலாப் பயணிக்கு வடகிழக்கு இந்தியா’ என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் மே 28, 2020ஆம் தேதி அன்று நடத்தியது. இதில் நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், அசாம், மற்றும் சிக்கிம் ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அழகான சுற்றுலாப்பகுதிகள் பற்றி இணையம் வழியாக காட்டப்பட்டது. இந்தியா தனிச் சிறப்புமிக்க நாடு என்பதை ஊக்குவிக்க, ‘எனது சேத்தைப்பார்’ என்ற தொடரின் கீழ் நாட்டின் பல பகுதிகள்  இணையச் சுற்றுலாவாகக் காட்டப்படுகின்றன. கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலிலும், இந்தியா தனிச்சிறப்பு மிக்க நாடு என்பது ஊக்குவிக்கப்படுகிறது.

எனது தேசத்தைப் பார் என்ற தொடரின் 25வது இணையக் கருத்தரங்கை மே 28, 2020ஆம் தேதி அன்று, கர்டைன் கால் அன்வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஜூலி காக்டி, இந்தியா டிரெயலின் தலைமைப் பயண அதிகாரி டேவிட் அங்காமி, மான்யூல் கேதரிங் துணை நிறுவனர் தேவராஜ் பரோ, அவர் ஹெஸ்ட் இணையதளத்தின் துணை நிறுவனர் பின்ட்சோ கியாட்சோ ஆகியோர் வழங்கினர்.

வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் செல்லப்படாத பகுதிகள், பழங்குடியினர், பண்டிகைள், கைவினைப்பொருள்கள், உள்ளூர் மக்களின் பண்பாடு ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விளக்கப்பட்டன. வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு, மலைப் பகதிகளில் மட்டும் அல்ல, இன்னும் பல இடங்களிலும், அனுபவங்களிலும் உள்ளது என இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அசாம் பெண்களை மையப்படுத்திய ஜவுளிப்பிரிவு, உள்ளூர் மக்கள் தங்கள் கலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவது ஆகியவை குறித்தும் இந்த இணையக் கருத்தரங்கு விளக்கியது.

இந்த இணையக் கருத்தரங்கு கூட்டங்களை என்ற இணைய முகவரியிலும், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சமூக இணையதளங்களிலும் காணலாம்.

எனது தேசத்தைப் பார் என்பது பற்றிய அடுத்த இணையக் கருத்தரங்கு, ‘கட்ச் வாழ்க்கை கதை’ என்ற தலைப்பில் மே 30,2020ஆம் தேதி நடக்கிறது. இதற்குப் பதிவு செய்ய https://bit.ly/kutchDAD என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக