வெள்ளி, 26 ஜூன், 2020

ஆரோக்கியமான உலகளாவிய கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் பழங்காலக் கடற்பாசிகளின் பங்கு


ஆரோக்கியமான உலகளாவிய கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் பழங்காலக் கடற்பாசிகளின் பங்கு

பழங்கால நுண்ணிய  கடல் பாசிகள் (Coccolithophores) பற்றி துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையத்தின் (National Centre for Polar and Ocean Research - NCPOR) தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தென்னிந்தியப் பெருங்கடல் பகுதியில் கால்சியம் கார்பனேட் (CaCO3) செறிவு குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. டையடோம்கள் எனப்படும் மற்றொரு ஒற்றை செல் பாசிகளின் செறிவு அதிகரிப்பதே, கால்சியம் கார்பனேட் குறைவுக்குக் காரணம். இது கொக்கோலிதோபோர்களின் வளர்ச்சி, எலும்புக்கூடு அமைப்பு மற்றும் கடல் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பாதிக்கும்.

தென்னிந்திய பெருங்கடலில் கோகோலிதோபோர்கள் அதிகளவில் இருப்பது,  மற்றும் அதன் பன்முகத்தன்மைச் செறிவு ஆகியவை நேரம் மற்றும் பல சுற்றுச்சூழல் காரணங்களைச் சார்ந்தது என  துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையம், தேசிய கடல்சார் நிறுவனம் (National Institute of Oceanography - NIO) மற்றும் கோவா பல்கலைக்கழகம் ஆகியவை தெரிவித்துள்ளன. சிலிக்கேட் செறிவுகள், கால்சியம் கார்பனேட் செறிவு, அபரிமிதமான டையடோம், ஒளி ஊடுருவல், பெரிய மற்றும் நுண்ணூட்டச்சத்து செறிவுகளின் கிடைக்கும் தன்மை போன்ற சுற்றுச்சூழல் காரணங்கள் தான் கோகோலிதோபோர்கள் அதிகளவில் இருப்பதற்கு காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக