செவ்வாய், 30 ஜூன், 2020

டாக்டர் மோனிகா சிங் மற்றும் டாக்டர் தீபிகா சர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.


மார்பக, நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் செல்களைத் தடுக்கக் கூடிய கனிம-கரிம கலப்பு சேர்மத்தை, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மொகாலியில் உள்ள மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், புதுமையான, மார்பக, நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் செல்களைத் தடுக்கக் கூடிய புதுவகை உலோகமருந்துகள் கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கக்கூடிய, கனிம-கரிம கலப்பு சேர்மத்தை உருவாக்கியுள்ளது. 

திட நிலையிலான இந்த பாஸ்போமாலிப்டேட் தொகுப்பு, பாலிஆக்ஸோமெட்டலேட் குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்போமாலிப்டிக் அமிலத்தின் கனிம உப்பு ஆகும்.  இந்த வகை உப்பு,  புற்றுநோயை எதிர்க்கும் திறன்பெற்றது என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.   டாக்டர் மோனிகா சிங் மற்றும் டாக்டர் தீபிகா சர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு,  புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.   இந்த ஆராய்ச்சி முடிவு டால்டன் பரிமாற்றங்கள் இதழில் வெளியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக