புதன், 24 ஜூன், 2020

மொஹாலியின் நிப்பர்(NIPER) அறிமுகப்படுத்தியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மூலிகைத் தேநீர்


மொஹாலியின் நிப்பர் அறிமுகப்படுத்தியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மூலிகைத் தேநீர்

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER), நோய்த் தொற்றைத் தடுத்து, உடல் ரீதியான எதிர்ப்பு சக்தியை வலுபடுத்தி, நோய் எதிர்ப்பபை  ஊக்குவிக்கும் மூலிகைத் தேநீரை அறிமுகப்படுத்தியுள்ளது. மொஹாலியின் எஸ்.ஏ.எஸ். நகரில் உள்ள நிப்பர் நிறுவனத்தின் இயற்கைப் பொருள்கள் துறை, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மூலிகைத் தேநீரை உருவாக்கியுள்ளது. இந்த மூலிகைத் தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை தகுந்த அளவில் மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதால்  கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தாக இதனைப் பயன்படுத்தப்படலாம்.

இந்த மூலிகைத் தேநீர்,  உள்நாட்டில் கிடைக்கக் கூடிய அஸ்வகந்தா, கிலோ, முலேதி, துளசி மற்றும் கிரீன் டீ ஆகிய ஆறு மூலிகைகளின்  கலவையாகும். நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை மேம்படுத்துவதையும், உணர்ச்சி முறையீட்டையும் கவனத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விகிதத்தில் கலக்கப்படுகின்றன. சுவையான தன்மையை வழங்ககூடிய வகையில் மூலிகைத் தேநீரை தயாரிப்பது எளிதானதாகும். 

இந்தத் தேநீரை நாள் ஒன்றுக்கு மூன்று முறை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இந்த தேநீர் பாதுகாப்பானது . இது தொண்டைக்கு இதமானது மற்றும் பருவகால காய்ச்சல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடவும் உடலுக்கு உதவும். மூலிகைத் தேநீர், வளாகத்தில் உள்ள நிப்பர் மருத்துவத் தாவர தோட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட / கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து மூலிகைகளைக் கொண்ட ஒரு உள்ளகத் தயாரிப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக