செவ்வாய், 30 ஜூன், 2020

6-ஆம் கட்ட ஊரடங்கு கட்டுபாடுகளோடும் , சில தளர்வுகளோடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான பயனை மக்கள் பெற வேண்டுமென்றால் அரசின் கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


“இந்த 6-ஆம் கட்ட ஊரடங்கு கட்டுபாடுகளோடும், சில தளர்வுகளோடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான பயனை மக்கள் பெற வேண்டுமென்றால் அரசின் கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த 5- ஆம் கட்ட ஊரடங்கு 30-6-2020 அன்று முடிவிற்கு வருகிறது.  மார்ச்சு 25 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கைகளால், தமிழக அரசு கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உரிய பல முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அவர்களின் சிறந்த பணிகளோடும் இணைந்து மக்கள் ஆதரவோடு மேற்கொண்டது, இருப்பினும் கொரோனா தொற்று பரவுதல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை, இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிலை நீடிக்கிறது,
உலகலவில் வளர்ந்த நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் தமிழக மக்கள் நலன் கருதி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, பரவலை தடுக்க, படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்க, தமிழகத்தில் 6-ஆம் கட்ட ஊரடங்கை தமிழக அரசு கட்டுப்பாட்டோடும், அதே நேரத்தில் சில தளர்வுகளோடும், ஜுலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது.

இந்த அவசியமான அறிவிப்பு என்பது மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடுமையாக பணியாற்றிக்கொண்டு இருக்கின்ற பல்வேறு துறையினரோடும் கலந்து பேசி எடுக்கப்பட்ட முக்கியமான, பயன் தரக்கூடிய முடிவாகும். 

எனவே பொது மக்களாகிய நாம் 6-ஆம் கட்ட ஊரடங்கை ஒரு உறுதியான வாய்பாக பயன்படுத்தி, கட்டுக்கோப்பாக செயல்பட்டு, அரசு கோட்பாடுகளை முழுமையாக கடைபிடித்து, கொரோனாவை படிப்படியாக விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வழி வகுப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக