திங்கள், 22 ஜூன், 2020

24 மணி நேரத்தில் 55,785 டன்கள் நிலக்கரியை ஒன்பதாவது தளத்தில் இறக்கி, அடுத்தடுத்து சாதனையை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புரிந்தது.


நிலக்கரியை இறக்குவதில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து சாதனை புரிந்தது வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம்

'எம்.வி. மைர்சினி' கப்பலில் இருந்து 19.06.2020 அன்று 24 மணி நேரத்தில் 55,785 டன்கள் நிலக்கரியை ஒன்பதாவது தளத்தில் இறக்கி, அடுத்தடுத்து சாதனையை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புரிந்தது. இதன் மூலம், 'எம்.வி. கிரீன் கே மேக்ஸ் எஸ்' கப்பலில் இருந்து ஒன்பதாவது தளத்தில் 55,363 டன்கள் நிலக்கரி கையாளப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டது. 

பளுவைக் குறிக்கும் அலகான DWT-இல் 82,117-ம், 229 மீட்டர்கள் நீளமும், 32.28 மீட்டர்கள் உத்திரமும், 14.12 மீட்டர்கள் கப்பலின் அடிக்கட்டைக்கும் தண்ணீருக்குமான தொலைவும் (draft) கொண்ட, மார்ஷல் தீவுகளில் இருந்து புறப்பட்ட, 'எம்.வி. மைர்சினி', திருவாளர்கள் செட்டிநாடு சிமெண்ட்ஸுக்கு சென்றடைய வேண்டிய 76,999 டன்கள் நிலக்கரியோடு இந்தோனேசியாவில் உள்ள டன்ஜுங்க் பாரா துறைமுகத்தில் இருந்து வந்தது. தூத்துக்குடியை சேர்ந்த திருவாளர்கள் இம்கோலா கிரேன் கம்பெனியால் மூன்று துறைமுக பளுதூக்கும் இயந்திரங்களின் மூலம் 55,785 டன்கள் நிலக்கரி 24 மணி நேரத்தில் இறக்கப்பட்டது. 

இந்தக் கப்பலின் போக்குவரத்து முகவர்களாக தூத்துக்குடியை சேர்ந்த திருவாளர்கள் சன் பீம் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டும், சரக்கை ஏற்றி இறக்கும் முகவராக தூத்துக்குடியை சேர்ந்த திருவாளர்கள் செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸும் இருந்தனர். 

குறிப்பிடத்தகுந்த அடுத்தடுத்த சாதனைக்காக துறைமுக அதிகாரிகளையும் இதர பங்குதாரர்களையும் பாராட்டிய வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் திரு. டி.கே. ராமச்சந்திரன் "மிகச் சிறந்த உள்கட்டமைப்பு, செயல் திறன் மற்றும் வ.உ.சி துறைமுகத்தின் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட பணியாளர்கள் ஆகியவற்றை இந்த சாதனை பறைசாற்றுகிறது", என்று தெரிவித்தார்.

மேற்கண்ட தகவல்கள் பத்திரிகை செய்தி ஒன்றின் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தால் தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக