புதன், 24 ஜூன், 2020

மியான்மர் நாட்டிலுள்ள ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஓ.வி.எல்.நிறுவனத்தின் கூடுதல் முதலீட்டிற்கு ஒப்புதல்

மியான்மர் நாட்டிலுள்ள ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஓ.வி.எல்.நிறுவனத்தின் கூடுதல் முதலீட்டிற்கு ஒப்புதல்

தென்கொரியா, இந்தியா மற்றும் மியான்மர் நாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக,  ஓ.என்.ஜி.சி. விதேஷ்நிறுவனம் (ஓ.வி.எல்.),  கடந்த 2002 முதல், மியான்மர் நாட்டின் ஷ்வே எரிவாயுத் திட்டத் துரப்பண மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளது.   இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனமும், இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.  ஓ.என்.ஜி.சி.யின் சர்வதேசப் பிரிவான ஓ.என்.ஜி.சி.விதேஷ் நிறுவனம்  31 மார்ச், 2019 வரை இத்திட்டத்தில் 722 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3,949கோடி) முதலீடு செய்துள்ளது.

   ஷ்வே திட்டத்திலிருந்து முதன்முறையாக ஜுலை 2013-இல் எரிவாயு பெறப்பட்டதோடு, டிசம்பர் 2014 முதல் நிலையான உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   2014-15 நிதியாண்டு முதல் இத்திட்டத்திலிருந்து லாபம் கிடைத்து வருகிறது.  எனவே, மியான்மர் நாட்டின் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தில் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனம், கூடுதலாக 121.27 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.909கோடி);  1 டாலர் =ரூ.75) முதலீடு செய்வதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  

இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளின்  எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்பது, கிழக்கை உற்று நோக்குங்கள் என்ற இந்தியாவின் திட்டத்தின் படியும்,  இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புத் தேவைகளை மேலும் வலுப்படுத்தவும்,  அண்டை நாடுகளுடனான எரிசக்திப் பிணைப்புகளை அதிகரிக்கவும் உதவும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக