திங்கள், 29 ஜூன், 2020

சிறுபான்மையினர் உட்பட ஒவ்வொருவரும் “கண்களில் மகிழ்ச்சி , வாழ்வில் வளம்” பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.- முக்தர் அப்பாஸ் நக்வி


மத்திய சிறுபான்மையினர் நலத்துறை விவகார அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி சன்ஸ்க்ரிதி சத்பவ மண்டபத்துக்கு உத்திரப்பிரதேசம் ராம்பூரில் அடிக்கல் நாட்டினார்

‘ஏக் பாரத் சிரேஷ்ட பாரத்’ –  ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை சுயசார்பு இந்தியா உறுதிப்படுத்தும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று ராம்பூரில் கூறினார்.: ராம்பூரில் நுமாயிஷ் மைதானத்தில் சன்ஸ்க்ரிதி சத்பவன மண்டபத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்த மண்டபம் 92 கோடி ரூபாய் செலவில், சிறுபான்மையினர் வசிக்கும் இந்தியாவின் 41 மாவட்டங்களில் அரசின் திட்டங்களைச் செய்ல்படுத்தும் பிரதமர் ஜன் விகாஸ் காரிய்கிரம் (PMJVK) என்ற திட்டத்தின் கீழ், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் கட்டப்படுகிறது. இந்த சமுதாய மையம் பல்வேறு சமூக-பொருளாதார செயல்பாடுகளுக்கும், திறன் வளர்ச்சிப் பயிற்சி, இதரப் பயிற்சிகள், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்வதற்கான செயல்பாடுகள், பல்வேறு விளையாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும். 

கடந்த ஆறு ஆண்டுகளில் PMJVK திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளில் சமூகப் பொருளாதாரக் கல்வி மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும், பல கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாக நிகழ்ச்சியில் பேசிய திரு.நக்வி கூறினார். இந்தத் திட்டங்களில் சில: 1512 புதிய பள்ளிக் கட்டடங்கள், 22 51 4 கூடுதல் வகுப்பறைகள், 630 விடுதிகள், 152 உறைவிடப் பள்ளிகள், 8870 ஸ்மார்ட் வகுப்பறைகள் ( கேந்திரிய வித்யாலயாக்களில் உள்ளவை உட்பட) 32 கல்லூரிகள், 94 ஐடிஐ, 13 பாலிடெக்னிக்குகள், இரண்டு நவோதயா வித்யாலயா, 403 பல்நோக்கு சமுதாய மையங்கள், 598 சந்தை அமைப்புகள், 2542 கழிவறைகள் குடிநீர் வசதிகள், 135 பொதுச் சேவை மையங்கள், 22 வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள், 1717 சுகாதாரத் திட்டங்கள், ஐந்து மருத்துவமனைகள், 8 ஹுணார் ஹட், 10 விளையாட்டு வசதிகள், 5956 அங்கன்வாடி மையங்கள். 

இதே போல் உத்தரப்பிரதேசத்திலும் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டுக்காக மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளினால் பெரிய அளவிலான கட்டமைப்பு வசதிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. PMJVK திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 980 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன 

சிறுபான்மையினர் உட்பட ஒவ்வொருவரும் “கண்களில் மகிழ்ச்சி , வாழ்வில் வளம்” பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று திரு நக்வி கூறினார். அரசு, ஏழை மக்களுக்கு 2 கோடி வீடுகளை வழங்கியபோது அதில் 31 சதவிகிதம் பயனாளிகள் சிறுபான்மையினர். நாட்டில் சுமார் ஆறு லட்சம் கிராமங்களுக்கு அரசு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளது. இந்த கிராமங்களில் 39 சதவீத கிராமங்கள் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் கிராமங்கள் ஆகும். இதுவரை இருளில் இருந்த இந்த கிராமங்களுக்கு இப்போது மின்சார வசதி கிடைத்துள்ளது. கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் 22 கோடி விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கப்பட்டன. இதில் 33 சதவிகிதம் விவசாயிகள் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இலவசமாக 8 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகப் பிரிவினருக்கும் இதர வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் முத்ரா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 24 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இதில் 36 சதவிகிதம் பேர் சிறுபான்மை வகுப்பினர். 

கடந்த ஆறு ஆண்டுகளில் ஹுணார் ஹாட், கரீப் நவாஸ் சுயவேலைவாய்ப்பு திட்டம், ‘ஸீகோ காமோ’ போன்ற பல வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை வகுப்பினர் பயன் அடைந்துள்ளார்கள் என்றும் திரு நக்வி கூறினார். மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் (இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்) மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக