செவ்வாய், 30 ஜூன், 2020

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளை அதிகரிப்பதற்கான தொலைநோக்கை திரு. மாண்டவியா அமைத்துள்ளார்.


கடல்சார் தொழிலில் இந்தியக் கப்பல்களை அதிகரிப்பதன் மூலம், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளை அதிகரிப்பதற்கான தொலைநோக்கை திரு. மாண்டவியா அமைத்துள்ளார்.

இந்தியக் கப்பல்கள், கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளை அதிகரிக்கும் தொலைநோக்குக்காக, கப்பல் உரிமையாளர் சங்கப்பிரதிநிதிகள், இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன், காணொளிக் காட்சி மூலம் நடந்த  கருத்தரங்குக்கு, கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.

இந்தியாவைக் கப்பல் பழுதுபார்க்கும் தளமாக மாற்றுவதற்கு,  கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளுக்கு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பைத் தயாரிக்க கப்பல் தொழில் பிரதிநிதிகளிடமிருந்து திரு  மாண்டவியா ஆலோசனைகள்  கேட்டார்.

இந்தியப்  பொறியாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல், கப்பல் கட்டும் தளத்தின் திறனை மேம்படுத்துதல் மற்றும் தேவையான உதிரி பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து வழங்குவது  போன்ற அம்சங்களை அவர் வலியுறுத்தினார்.

சுயசார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலை நோக்கை வலியுறுத்திய திரு மாண்டவியா, ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் துறைமுகங்களுக்கு 30,000 கப்பல்கள் வருவதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கப்பல் பழுது பார்க்கும் கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்துக்கு நிகராகப் புதுப்பிக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்தியக்  கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செயல்திட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கு திரு.மாண்டவியா  அறிவுறுத்தினார், இதன் மூலம் சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தலாம்.  கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். மேலும் இது சரக்கு கட்டணங்களை குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக