மன்சுக் மாண்டவியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்சுக் மாண்டவியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2022

கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.


 கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று  திரு மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொவிட் தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.  கொவிட் சிகிச்சையின் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுவதாக அவர் கூறினார்.

சனி, 9 ஜூலை, 2022

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்குவதற்கு மக்கள் பங்களிப்பு முக்கியமானது.- டாக்டர் மன்சுக் மாண்டவியா

 வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு 13 மாநிலங்களுக்கு (உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு) டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.  கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு  இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தயார்நிலையை ஆய்வு செய்தபோது மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். மழைக்காலம் தொடங்கவுள்ளதை அடுத்து இன்று காணொலி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் , தில்லி துணை முதலமைச்சர் திரு மணீஷ் சிசோடியா, பீகார் சுகாதார அமைச்சர் திரு மங்கள் பாண்டே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  திரு மா. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்,  ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் திரு பன்னா குப்தா ஆகியோர் மெய்நிகர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வெள்ளி, 1 ஜூலை, 2022

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்


 தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,  இணையமைச்சர்கள் டாக்டர் பாரதி பிரவீன் பவார், சுகாதாரத்துறை செயலாளர்  திரு ராஜேஷ் பூஷன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவ துறையினருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். “நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள், நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றும் அவர் கூறினார். அந்தவகையில் அவர்களது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உரப்பயன்பாட்டு முறையை மாற்றியமைக்கும் விதமாக, நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.- ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா


 மத்திய சுகாதாரம் – குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார். அந்த ஆலையின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மத்திய அமைச்சர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார். ஆலையின் கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்ட அவர், கட்டுப்பாட்டு அறை இயங்கும் விதம் குறித்து ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, உர உற்பத்தியில் தற்சார்பை அடைய கூட்டு முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்ததற்காக ஆலை நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை வெற்றிகரமாக விநியோகித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், 2022 கரீஃப் பருவத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு கலந்த யூரியா உரத்தை விநியோகித்திருப்பதுடன், புதுச்சேரியின் கரீஃப் பருவத்திற்குத் தேவையான 7300 மெட்ரிக் டன்னில் ஏறத்தாழ 82 சதவிகிதம் அளவிற்கு இந்த ஆலையிலிருந்து விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

திங்கள், 13 ஜூன், 2022

"வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்


 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  மூத்த அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ்  மூலம் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார். நிகழ்ச்சி “வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” (HarGharDastak 2.0) ஹர் கர் தஸ்தக் அபியான் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார்.

“கோவிட் இன்னும் தீரவில்லை. சில மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில், தொற்று பரவாமல் தடுக்க முகமூடி அணிவது மற்றும் பாதுகாப்பான இடைவெளியை பராமரிப்பது போன்ற கோவிட் பொருத்தமான நடைமுறைகளை (CAB) ஒருவர் மறந்துவிடக் கூடாது.

செவ்வாய், 2 நவம்பர், 2021

தில்லியில் டெங்குவுக்கான பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.- திரு மன்சுக் மாண்டவியா


 தில்லியில் டெங்கு நிலவரம் குறித்து ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவும் தில்லி யூனியன் பிரதேச அரசுடன் உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். 

திங்கள், 1 நவம்பர், 2021

உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு மத்திய ரசாயனம் & உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மான்டவியா விளக்கம்


 நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான வதந்திகளுக்கு,  மத்திய ரசாயனம் & உரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மான்டவியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், நவம்பர் மாதத்திற்கான உர உற்பத்தி இலக்கு குறித்து அதிகாரிகாரிகளுடன் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவையை விட, உற்பத்தி அதிகமாக இருக்கும். யூரியா உரத்தின் தேவை 41 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், 76 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதேபோன்று, டிஏபி உரம் 17 லட்சம் மெட்ரிக் டன் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. என்பிகே உரங்கள் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தேவைப்படும் நிலையில் 30 லட்சம் மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட உள்ளது.

சனி, 30 அக்டோபர், 2021

மக்களிடையே நிமோனியா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விழிப்புணர்வு தொகுப்பை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.


 விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்குமான  தடுப்பூசி திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். மக்களிடையே நிமோனியா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விழிப்புணர்வு தொகுப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.   

புதன், 27 அக்டோபர், 2021

ஆயுஷ்மான் பாரத் திட்டம் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றம் மூன்றாம் நிலை டிஜிட்டல் நலன் கட்டமைப்பை வழங்குகிறது. - மன்சுக் மாண்டவியா


 முழுமையான அணுகுமுறையின் கீழ் சுகாதார நலன் குறித்த விரிவான தொலைநோக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ளார் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்புத் திட்டம் குறித்து திரு மன்சுக் மாண்டவியா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது. முழுமையான அணுகுமுறை நோக்கிய விரிவான சுகாதார நலனுக்கான  தொலைநோக்கை நமக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்துள்ளார்

செவ்வாய், 26 அக்டோபர், 2021

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்ற உள்ளார்


மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் லட்சியத்தின் ஒரு பகுதியாக, 2021 அக்டோபர் 27 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து மருந்துகள் துறை காணொலி  வாயிலாக நடத்த உள்ளது.

"மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையிலுள்ள வாய்ப்புகள் மற்றும் கூட்டுகள்" என்பது இந்த உச்சி மாநாட்டின் மையக்கருவாகும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இம்மாநாட்டில் உரையாற்ற உள்ளார்

சனி, 18 செப்டம்பர், 2021

சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு தின கொண்டாட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்


 சர்வதேச நோயாளிகள் தின கொண்டாட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையின் நிகழ்ச்சி நடைபெற்றது.

2021 செப்டம்பர் 11 முதல் 17 வரை இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வந்த நோயாளிகள் பாதுகாப்பு வாரம் இத்துடன் நிறைவு பெற்றது. “கர்ப்பகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு” என்பது இந்த வருட நோயாளிகள் பாதுகாப்பு தினத்தின் மையக்கருவாகும்.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

கோவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி திறன் அதிகரிப்பு, இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்துக்கு மேலும் உந்துதல் அளிக்கும். - திரு மன்சுக் மாண்டவியா


 குஜராத் மாநிலம், அங்கலேஸ்வரில் பாரத் பயோடெக் நிறுவனத்தின், சிரான் பெரிங் தடுப்பூசி மையத்தில், உற்பத்தி செய்யப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின்  முதல் வர்த்தக தொகுப்பை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார். நவ்சாரி தொகுதி எம்பி திரு சி.ஆர்.பாட்டீல், அங்கலேஸ்வர் எம்எல்ஏ திரு ஈஸ்வர்சிங் படேல், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

இதன் தொடக்க நிகழ்ச்சியில், திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை, தேசிய மருந்துகள் விலைக் கொள்கை (NPPP), 2012 பரிந்துரைக்கிறது.- திரு.மன்சுக் மாண்டவியா


 மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை, தேசிய மருந்துகள் விலைக் கொள்கை (NPPP), 2012 பரிந்துரைக்கிறது. மருந்துகள் துறையின் கீழ் செயல்படும், தேசிய மருந்துகள் விலை ஆணையம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கான திட்டமிடப்பட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கிறது மற்றும் திட்டமிடாத மருந்துகளின் விலையையும் கண்காணிக்கிறது.   புற்றுநோய் சிகிச்சைக்கான, 42 திட்டமிடாத மருந்துகளின் விலைக்கு உச்சவரம்பை என்பிபிஏ நிர்ணயம் செய்துள்ளது. இந்த அணுகுமுறையால் 526 பிராண்ட் மருந்துகளின் விலை 90 சதவீதம் வரை குறைந்துள்ளது. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகளின் விலை மாற்றியமைக்கப்பட்டது, ஸ்டெண்டுகளின் விலை நிர்ணயம் ஆகியவற்றால் மக்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.12,500 கோடி அளவுக்கு சேமிப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

(Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyajana) பிரதமரின் பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்நலத்துறை அமைச்சர்  திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2ம் தேதி வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. 2025, மார்ச் மாதத்துக்குள் 10,500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும். அரசு மருத்துவமனை வளாகங்களில், கடந்த 2ம் தேதி வரை  1,012 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.  மக்கள் மருந்தக கடை உரிமையாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய சுகாதாரம் & குடும்ப நலன், ரசாயனம் & உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. புதிய உற்பத்தி நிலையங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிப்பது, உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க உதவுவது, இறக்குமதியாளர்களுக்கு அதிகளவு மருந்துகள் கிடைக்க உதுவுவது ஆகியவை இவற்றில் அடங்கும்.

சனி, 31 ஜூலை, 2021

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது.- மத்திய சுகாதாரம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா



 நோய் கட்டுப்பாடு தேசிய மையத்தின்  112வது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவாருடன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணுயிர் எதிர்ப்புக்கான(AMR) முழு மரபணு வரிசைமுறை தேசிய குறிப்பு ஆய்வகம் மற்றும் புதிய உயிர்பாதுகாப்பு நிலை (BSL) 3 ஆய்வகம், முதுநிலை மாணவர்கள் விடுதி மற்றும் விருந்தினர் இல்லத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வக வளாகத்தில், 5 தளங்கள் மற்றும் 22 பிஎஸ்எல்-2 ஆய்வகங்கள் உள்ளன.

வெள்ளி, 30 ஜூலை, 2021

தரமான மருத்துவக் கல்வி, வெளிப்படைத்தன்மை மிக்க தேர்வு உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகளை உருவாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 தேசிய மருத்துவ ஆணையத்துடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று தலைமை வகித்தார். மருத்துவக் கல்வி குறித்த முக்கிய விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தவாறு, தேசிய எக்சிட் தேர்வை (NExT) திட்டமிட்டவாறு 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செவ்வாய், 27 ஜூலை, 2021

மருந்துகளுக்கான உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஆறு வருடங்களில் ரூ 1,96,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் படி, 2020 மே 29 அன்று மொத்தம் 8532 மருந்து நிறுவனங்கள் நாடு முழுவது இயங்கி வந்தன. இவற்றில் தமிழ்நாட்டில் 514 நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்திய உர நிறுவனத்தின் டால்ச்சர் ஆலைக்கு புத்தாக்கம் தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

செவ்வாய், 13 ஜூலை, 2021

உர உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்குவது குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு கூட்டம்


 உர உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்குவது குறித்து ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில் இத்துறையின் இணையமைச்சர் திரு பகவன்த் குபா, உரத்துறை செயலாளர் திரு ஆர்.கே.சதுர்வேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

திங்கள், 12 ஜூலை, 2021

ரூ. 23,000 கோடி கொவிட் தொகுப்பின் மூலம் அடுத்த 6 மாதங்களில் திறன் கட்டமைப்பை மேம்படுத்தும் விரிவான திட்டம் வருகின்றன.- திரு மன்சுக் மாண்டவியா


 மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் பாவ்நகரில் உள்ள சர் தக்தசின்ஹிஜி மருத்துவமனையில்  பிரத்தியேக அழுத்த விசை உறிஞ்சுதல்  தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) 2 மருத்துவப் பிராணவாயு உற்பத்தி ஆலைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

நிமிடத்திற்கு 1000 லிட்டர் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலைகளுடன், செப்பு குழாய் இணைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தீயணைப்பு அமைப்புமுறை மற்றும் தானியங்கி பிராணவாயு ஆதார மாற்று அமைப்புமுறையும் துவக்கி வைக்கப்பட்டன.