செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.- திரு மன்சுக் மாண்டவியா


 நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய சுகாதாரம் & குடும்ப நலன், ரசாயனம் & உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. புதிய உற்பத்தி நிலையங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிப்பது, உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க உதவுவது, இறக்குமதியாளர்களுக்கு அதிகளவு மருந்துகள் கிடைக்க உதுவுவது ஆகியவை இவற்றில் அடங்கும்.

சில காலத்திற்கு ஏற்றுமதிகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் மற்றும் அம்போடெரிசின் பி ஆகிய மருந்துகள் சம அளவில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் மற்றும் அம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளின் ஒதுக்கிடு முறையே ஏப்ரல் 21, ஏப்ரல் 27 மற்றும் மே 11, 2021 ஆகிய நாட்களில் தொடங்கின. இம்மருந்துகள் போதிய அளவில் கிடைத்ததை அடுத்து, ரெம்டெசிவிர் மற்றும் அம்போடெரிசின் பி விநியோகம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

போலி மருந்துகள் குறித்த புகார்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் பெற்றப்படுகின்றன. புகார்கள் வந்தடைந்தவுடன், மாநில/யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டாளருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2017-18-ம் ஆண்டு 82599 மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 236 மாதிரிகள் போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்டன. போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்ட மருந்துகளின் சதவீதம் 0.28 ஆகும்.

2018-19-ம் ஆண்டு 79604 மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 205 மாதிரிகள் போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்டன. போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்ட மருந்துகளின் சதவீதம் 0.27 ஆகும்.

2019-20-ம் ஆண்டு 81329 மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 199 மாதிரிகள் போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்டன. போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்ட மருந்துகளின் சதவீதம் 0.24 ஆகும்.

2020-21-ம் ஆண்டு 69272 மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 139 மாதிரிகள் போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்டன. போலியானவை/கலப்படம் செய்யபப்பட்டவை என அறிவிக்கப்பட்ட மருந்துகளின் சதவீதம் 0.20 ஆகும்.

ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வர்த்தகத் துறை எடுத்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் உள்ள திட்டங்கள், சந்தை அணுகல் முன்னெடுப்புத் திட்டம், மாவட்ட ஏற்றுமதி மையங்களை அமைத்தல், போக்குவரத்து மற்றும் சந்தை உதவித் திட்டம் ஆகியவை இவற்றில் அடங்கும்.

மொத்த மருந்துகள், இடைநிலை மருந்துகளின் ஏற்றுமதி மதிப்பை பொருத்த அளவில் 2018-19-ம் ஆண்டு 3911 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2019-20-ம் ஆண்டு 3886 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2020-21-ம் ஆண்டு 4430 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

மருந்து செயல்முறைகள் மற்றும் உயிரியல் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பை பொருத்த அளவில் 2018-19-ம் ஆண்டு 14389 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2019-20-ம் ஆண்டு 15941 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2020-21-ம் ஆண்டு 19042 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

செயல்மிகு மருந்து பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு, இறக்குமதிகளை விட அதிகமாக உள்ளது. 2020-21-ம் ஆண்டு 3,90,467 மெட்ரிக் டன் அளவில் இறக்குமதியும், 3,24,331 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதியும் இருந்துள்ளது.

2020-21-ம் ஆண்டு ரு 28529 கோடி அளவில் இறக்குமதியும், ரு 32856 கோடி அளவில் ஏற்றுமதியும் இருந்துள்ளது. உற்பத்திச் சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம், மொத்த மருந்துப் பூங்காக்களை ஊக்குவிப்பதற்கானத் திட்டம் ஆகியவை அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக