செவ்வாய், 30 ஜூன், 2020

இந்திய உணவுக் கழகம் 745.66 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 388.34 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையயை கொள்முதல் செய்துள்ளது.


இந்திய உணவுக் கழகத்திடம் போதிய அளவு உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது; ஜுன் மாதம் வரை இந்திய உணவுக் கழகம் 745.66 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 388.34 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையயை கொள்முதல் செய்துள்ளது.

சுயசார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின்கீழ், 209.96 லட்சம் பயனாளிகளுக்கு 99,207 மெட்ரிக் டன் உணவு தானியங்களும், பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் 203.85 கோடி பயனாளிகளுக்கு 101.90 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளது.

மொத்த உணவுதானியக் கையிருப்பு  :

இந்திய உணவுக் கழகத்தின் 28.06.2020 அன்றைய அறிக்கையின்படி,  இந்திய உணவுக்கழகத்திடம் தற்போது 266.29 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 550.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளது.  எனவே,  மொத்தத்தில் 816.60 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் (தற்போது கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை கிடங்கிற்கு வந்து சேராத கோதுமை மற்றும் அரிசி நீங்கலாக) இருப்பில் உள்ளது.    தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின்கீழ் வினியோகிப்பதற்கு,  மாதந்தோறும் 55 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் தேவைப்படும்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து,  138.43 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள், 4,944 ரயில் பெட்டிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.  இது தவிர, சாலை மற்றும் நீர்வழிப்பாதைகள் மூலமாகவும், உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மொத்தத்தில் 277.73 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன.   14 கப்பல்கள் மூலமாக 21,724 உணவுதானியங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் 13.47 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன.  

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட உணவு தானியம் : (சுயசார்பு இந்தியா தொகுப்பு)

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா தொகுப்பின்கீழ்,  8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,  சிக்கித்தவிப்போர் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அல்லது மாநில அரசுகளின் பொதுவினியோகத் திட்டத்தில் இடம்பெறாத,  உணவு தானியங்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மே மற்றும் ஜுன் மாதங்களில் , தலா 5கிலோ வீதம் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 6.39லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பெற்றுள்ளன.   மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்,  மொத்தம் 209.96 லட்சம் (மே மாதத்தில் 120.08லட்சம், ஜுன் மாதத்தில் 89.88லட்சம்) பயணாளிகளுக்கு, 99,207 மெட்ரிக்டன் உணவு தானியங்களை வினியோகித்துள்ளன. 

மேலும், 1.96 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, 39,000 மெட்ரிக் டன் பருப்பு வகைகளை வழங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,  சிக்கித்தவிப்போர் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அல்லது மாநில அரசுகளின் பொதுவினியோகத் திட்டத்தில் இடம்பெறாத,  உணவு தானியங்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு தலா 1கிலோ பருப்பு, மே மற்றும் ஜுன் மாதத்தில் இலவசமாக வழங்கப்படும்.   மாநிலங்களின் தேவைக்கேற்ப பருப்பு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு,  சுமார் 33,968 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால்,  4,702 மெட்ரிக் டன் பருப்பு விநியோகிக்கப்படுடுள்ளது.  இத்திட்டத்தின்கீழ், சுமார் ரூ.3,109 கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் மற்றும் ரூ.280 கோடி மதிப்பிலான பருப்பு வகைகளுக்கான  100 சதவீத நிதிச்சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.  

பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா :  உணவு தானியங்கள் (அரிசி/கோதுமை)

பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ்,  ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான 3 மாதங்களுக்கு, மொத்தத்தில் 104.3லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 15.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை தேவைப்பட்ட நிலையில்,  101.02 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 15.00லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.    ஏப்ரல் 2020-இல்,  74.05 கோடி பயனாளிகளுக்கு, 37.02 லட்சம் மெட்ரிக் டன் (93%) உணவு தானியங்களும்,  மே 2020-ல்  72.99 கோடி பயனாளிகளுக்கு  36.49லட்சம் மெட்ரிக் டன்(91%) உணவு தானியங்களும், ஜுன் 2020-இல், 56.81கோடி பயனாளிகளுக்கு  28.41லட்சம் மெட்ரிக் டன்(71%) உணவு தானியங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின்கீழ், மொத்தம் ரூ.46,000 கோடி நிதிச்சுமையை மத்திய அரசே 100 சதவீதம்ஏற்றுக்கொண்டுள்ளது.  பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், சண்டிகர், தில்லி மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமையும்,  எஞ்சிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களக்கு அரிசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

பருப்பு வகைகளைப் பொறுத்தவரை,  மூன்று மாதங்களுக்கான மொத்தத் தேவை 5.87 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.  இத்திட்டத்தின் கீழ் ஏற்படும்   நிதிச்சுமையையான ரூ.5,000 கோடியை 100 சதவீதம் மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.   இதுவரை 5.79லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதில் 5.58லட்சம் மெட்ரிக் டன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்றடைந்துள்ளது, அதே வேளையில், 4.40லட்சம் மெட்ரிக் டன் பருப்பு  மாநில/யூனியன் பிரதேச அரசுகளால் விநியோகிக்கப்பட்டுள்ளது.  மொத்தத்தில்,  18.6.2020 நிலவரப்படி,  8.76 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு (துவரம்பருப்பு – 3.77லட்சம் மெட்ரிக் டன்,  உளுத்தம்பருப்பு – 2.28லட்சம் மெட்ரிக் டன்,  சன்னா -1.30லட்சம் மெட்ரிக் டன் மற்றும் மசூர் பருப்பு  - 0.27லட்சம் மெட்ரிக் டன்) கையிருப்பில் உள்ளது. 

உணவுதானியக் கொள்முதல் : 

28.06.2020 நிலவரப்படி மொத்தம் 388.34 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை (ஆர்.எம்.எஸ்.2020-21) மற்றும் 745.66லட்சம் மெட்ரிக் டன் அரிசி (கே.எம்.எஸ்.2019-20) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டம்  : 

திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ், அரிசிக்கு ரூ.22/கிலோ மற்றும் கோதுமைக்கு ரூ.21/கிலோ விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கு காலத்தில், இத்திட்டத்தின்கீழ், இந்திய உணவுக் கழகம், 5.71 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 10.07லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விற்பனை செய்துள்ளது.  

ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை : 

01 ஜுன் 2020 நிலவரப்படி,  ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், டாமன் – டையூ(தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி), ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம்,  பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சிக்கிம், மிசோரம், மற்றும் திரிபுரா என 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக