செவ்வாய், 23 ஜூன், 2020

தவறு செய்த காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


தவறு செய்த காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட வியாபாரிகள், திரு. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் இறந்த செய்தி செய்தி மிகவும் அதர்ச்சிக்குரியது, வேதனைக்குரியது.

கொரானா தாக்க காலத்திலும் மக்களுடைய தேவைக்காக தனது செல்போன் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த தந்தை திரு. ஜெயராஜ் மகன் திரு.பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், இருவரும் ஒருவர் பின் ஒருவராக
இறந்த செய்தி வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ப்த்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். தவறு வேண்டும். தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை, எடுக்க வேண்டும். மேலும் வியாபாரிகளான தந்தை, மகனும் ஒரே நேரத்தில் இறந்தவிட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

திரு. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், வியாபார நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக