செவ்வாய், 23 ஜூன், 2020

கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட பி.எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்கள்


கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட பி.எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்கள்

அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கோவிட் சிகிச்சைக்காக விநியோகிப்பதற்காக இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியத்தில் இருந்து ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

50000 வென்டிலேட்டர்களில், 30000 வென்டிலேட்டர்களை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. மீதமுள்ள 20000 வென்டிலேட்டர்களை அக்வா ஹெல்த்கேர் (10000), ஏஎம்டிஇசட் பேசிக் (5650), ஏஎம்டிஇசட் ஹை எண்ட் (4000) மற்றும் அல்லிட் மெடிக்கல் (350) நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா (275), டெல்லி (275), குஜராத் (175), பீகார் (100), கர்நாடகா (90), ராஜஸ்தான் (75) ஆகியவை இதில் அடங்கும். ஜூன் 2020 இறுதிக்குள், கூடுதலாக 14,000 வென்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.  1000 கோடி ஏற்கனவே மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதம்,  கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையில் 40 சதவீதம் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கிடையே சம விநியோகத்திற்கு 10 சதவீதம் என்ற சூத்திரத்தின் அடிப்படையில் இந்த நிதிவிநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி புலம்பெயர்ந்தோரின் தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிதி வழங்கப்பட்டுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மகாராஷ்டிரா (181 கோடி), உத்தரப்பிரதேசம் (103 கோடி), தமிழ்நாடு (83 கோடி), குஜராத் (66 கோடி), டெல்லி (55 கோடி), மேற்கு வங்கம் (53 கோடி), பீகார் (51 கோடி) ), மத்தியப் பிரதேசம் (50 கோடி), ராஜஸ்தான் (50 கோடி), கர்நாடகா (34 கோடி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக