செவ்வாய், 30 ஜூன், 2020

அன்டார்க்டிக் பாக்டீரியாவிலிருந்து புற்றுநோய் எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் கொழுப்புச்சத்து அளவைக் குறைக்கக் கூடிய மருந்துகளாக பயன்படுத்தலாம்.


அன்டார்க்டிக் பாக்டீரியாவிலிருந்து கிடைக்கம் தங்க நானோதுகள்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பகுப்பாய்வு செய்து சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமும், கோவா பல்கலைகழகமும் இணைந்து, மனநல சகிப்புத்தன்மையுடைய அன்டார்க்டிக் பாக்டீரியாவைப் பயன்படுத்தி, தங்க நானோதுகள்களை வெற்றிகரமாக பகுப்பாய்வு செய்துள்ளனர்.   நச்சு அல்லாத,   குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது.  இதுபற்றி,  துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமும், கோவா பல்கலைகழகமும் மேற்கொண்ட ஆய்வில்,  20-30 நானோமீட்டர் அளவுள்ள வட்டவடிவிலான தங்க நானோ துகள்களை, கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் பகுப்பாய்வு செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.   இந்த தங்க நானோதுகள்களை,   கலப்பு சிகிச்சை முகவர் மருத்துவ பரிசோதனைக்கு, குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் கொழுப்புச்சத்து அளவைக் குறைக்கக் கூடிய மருந்துகளாக பயன்படுத்தலாம்.  

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமும், கோவா பல்கலைகழகமும் மேற்கொண்ட ஆய்வில்,  தங்க நானோ துகள்கள்களை சல்பேட் குறைப்பு பாக்டீரியா மீது செலுத்தும்போது,  

மரபணு நச்சு   விளைவு ஏற்படுவது தெரியவந்துள்ளது.   சல்பேட் குறைப்பு பாக்டீரியா-வின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, பாக்டீரியா செல்லின் டி.என்.ஏ.  பற்றிய மரபணு தகவல்களை சிதைப்பதன் மூலம், சல்பைடு உற்பத்தி செய்வதன் வாயிலாக, தங்க நானோதுகள்கள், பாக்டீரியா எதிர்ப்பு தன்மையை பெருமளவு  

 வெளிப்படுத்துவதும் தெரியவந்துள்ளது.   டி.என்.ஏ.பற்றிய மரபணு தகவல்களை அழிக்கும் திறன்பெற்ற ஒரு ரசாயண முகவர் தன்மையை மரபணு நச்சுத்தன்மை வெளிப்படுத்தியிருப்பதுடன்,  புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடிய செல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக