திங்கள், 18 மே, 2020

செல்லாத அல்லது செயல்படாத FASTAG வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.


செல்லாத அல்லது செயல்படாத FASTAG வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணங்கள் நிர்ணயித்தல் மற்றும் வசூல்)  விதிகள் 2008இல் திருத்தம் செய்து 2020 மே 15 தேதியிட்ட அறிவிக்கை GSR 298 E-ஐ வெளியிட்டுள்ளது. FASTAG ஒட்டாத அல்லது செல்லத்தகுந்த FASTAG இல்லாத அல்லது செயல்பாட்டு நிலையில் இல்லாத FASTAG இருந்து, சுங்கம் செலுத்த வேண்டிய சாவடிகளில் `FASTAG ' வாகனங்களுக்கான பாதையில் நுழைந்தால், அந்த வாகனத்திற்கான இயல்பு கட்டணத்தைவிட இரு மடங்கு கட்டணம் வசூலிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் FASTAG இல்லாத வாகனங்களுக்கு மட்டும், FASTAG பாதையில் நுழைந்தால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக