ஞாயிறு, 24 மே, 2020

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்


கொவிட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்காக முன்னெச்சரிக்கை மற்றும் செயல்மிகு அணுகுமுறை மூலம், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொவிட்-19 மேலாண்மை முயற்சிகள் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பிரத்யேக கொவிட் சுகாதார மையமாக செயல்பட்டு வரும் தில்லியில் உள்ள சவுத்ரி பிரம்ம பிரகாஷ் ஆயுர்வேத் சரக் சன்ஸ்தானில், கொவிட்-19 பாதிப்புகளின் மேலாண்மைக்கான தயார் நிலையை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன் இன்று பார்வையிட்டார். பல்வேறு வசதிகள் மற்றும் வார்டுகளைப் பார்வையிட்ட அவர், ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி ஒருங்கிணந்த அணுகுமுறை மூலம் கொவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரடியாகப் பார்வையிட்டார்.


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, மிதமான பாதிப்புள்ளதாக மருத்துவ ரீதியாக வகைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளே பிரத்யேக கொவிட் சுகாதார மையங்கள் ஆகும். முழு மருத்துவமனையாகவோ அல்லது ஒரு மருத்துவமனையின் தனி வளாகமாகவோ இருக்கும் இவற்றில் தனி உள்ளே வரும்/வெளியே செல்லும்/மண்டல வசதிகள் இருத்தல் நலம்.  

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: அவற்றை இங்கே காணலாம்:


உள்நாட்டுப் பயணத்துக்கும் (விமான/ரயில்/மாநிலங்களுக்கிடையேயான பேருந்துப் பயணம்) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: அவற்றை இங்கே காணலாம்: 


இது வரை 54,440 பேர் குணமடைந்துள்ளனர். 2657 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த குணமாகும் விகிதம் 41.28 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் நேற்றிலிருந்து 6767 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்னிக்கை 1,31,868 ஆகும். தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 73,560 ஆகும்.

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் அண்மைத் தகவல்கள், நுட்பமான விஷயங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் குறித்த தகவல்களுக்கு தயவுசெய்து பின்வரும் சுட்டிகளைத் தொடர்ந்து பாருங்கள் :

https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.

கோவிட்-19 தொடர்பான நுட்பமான வினவல்கள் இருந்தால் technicalquery.covid19@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மற்ற வினவல்களுக்கு ncov2019@gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.


கோவிட்-19 குறித்த ஏதும் தகவல்கள் தேவைப்பட்டால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +91-11-23978046  அல்லது 1075 (கட்டணமில்லா தொலைபேசிகள்). கோவிட்-19 குறித்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியல் பின்வரும் இணையதள சுட்டியில் தரப்பட்டுள்ளன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக