கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல. - டிடிவி.தினகரன்
ஜூன் மாத இறுதிக்குப் பிறகே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று நான்கு நாட்களுக்கு முன்பு கூறியிருந்த கல்வியமைச்சர் இப்போது அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன்? அதற்குள் என்ன நடந்தது? எல்லாவற்றையும் போல இதிலும் ஆட்சியாளர்கள் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்களா?
கடந்த ஒரு வாரமாக பல நூறு பேர் நாள் தோறும் கூடுதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடும் இம்முடிவை பழனிசாமி அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
மேலும் பெருந்தொற்று நோயால் அனைவரும் உளவியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இத்தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம்.
அதுவரை பொதுத் தேர்வினை தள்ளிவைத்துவிட்டு, நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பணிகளைச் செய்வதிலுமே அரசு எந்திரத்தின் முழுகவனமும் இப்போதைக்கு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக