ஞாயிறு, 10 மே, 2020

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு தடைகளைத் தகர்த்து நமது பயணத்தைத் தொடர்வோம் - டிடிவி.தினகரன்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், உணர்விலும் " மேலூர் சாமி "யைப் பார்க்கிறேன்! - டிடிவி.தினகரன்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு....

வரலாறு நெடுகிலும் மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கங்களையும் அமைப்புகளையும் அப்பழுக்கில்லாத தொண்டர்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள், அப்படி புரட்சித்தலைவர் தொடங்கிய, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கழகத்தை மீட்க, துரோகத்தை வீழ்த்திட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் நம் இயக்கத்தையும் அம்மாவின் உண்மையான தொண்டர்களாகிய நீங்கள்தான் உருவாக்கினீர்கள். கொள்கையில் கொண்ட உறுதியை தலைமை மீதான உள்ளன்பால் இந்த இயக்கத்தைக் கட்டி எழுப்பிய லட்சோப லட்சம் தொண்டர்களில் முன்னணி வரிசையில் நின்று நம் இதயத்திலும், நம் இயக்கத்திலும் இரண்டற கலந்திட்ட என் ஆருயிர்ச் சகோதரன் மேலூர் ஆர்.சாமியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்று.

எப்போதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கும் சாமியின் நினைவுகள், இந்த நாளில் இன்னும் அதிகமாக சுழல்கின்றன. மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பைப் பெற்று கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக ஆர்.சாமியும், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக நானும் தமிழகம் முழுவதும் இணைந்து பணியாற்றிய நாட்கள் பசுமையாக மனதில் இருக்கின்றன. மேலூர் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்து, தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வாகை சூடிய சாமி, ஆயிரம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கழகம் காக்க ஒரு போராட்டத்திற்குத் தயாரான காட்சிகள் என் கண் முன்னே இப்போதும் நிழலாடுகின்றன. என் சகோதரன் சாமியின் அந்த மன உறுதியையும், வீரத்தையும் எப்போது நினைத்து பார்த்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் புத்தம்புது உத்வேகமும், லட்சியத்தை வென்றெடுப்பதற்கான உன்னத சக்தியும் கிடைத்திடும்.

அன்றைக்கு மேலூர் சாமியின் சொந்த இடத்தில் லட்சோப லட்சம் தொண்டர்களின் முழக்கத்தோடு முதன்முதலாக கம்பீர திருஉருவம் தாங்கிய நம் கழகத்தின் ஏற்றப்பட்ட, அம்மா அவர்களின் கொடி, இன்றைக்கு தமிழ் கூறும் நல் உலகம் முழுக்க பட்டொளிவீசி பறக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட மாடு நிகர்த்த நிகழ்வை மேலூரில்தாள் நடத்த வேண்டும் என விரும்பிக் கேட்டு, உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராது நிர்வாகிகளோடும், கழகத் தொண்டர்களோடும் இணைந்து செயல்பட்ட சாமியின் உழைப்பு இன்னும் என் கண்களைவிட்டு அகலவில்லை.

உறுதியான உள்ளம், கடுமையான உழைப்பு, ஒரு நாளும் மாறாத கொள்கை பிடிப்பு - இவையெல்லாம் உண்மைத் தொண்டரின் குணங்களல்லவா! அப்படிப்பட்ட உண்மைத் தொண்டர்கள் நிறைந்துள்ள இயக்கம்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். உங்கள் ஒவ்வொருவரின் உண்மையான உழைப்பிலும், உள்ளம் நிறைந்த பாசத்திலும் என் அன்புச் சகோதரன் சாமியின் உணர்வைப் பார்க்கிறேன். ஆமாம்... நம்மோடு லட்சோப லட்சம் "மேலூர் சாமி" கள் இருக்கிறார்கள் 

தடைகளைத் தகர்த்து நமது பயணத்தைத் தொடர்வோம்...!

தமிழினம் பெருமைப்படும் வகையில் நிச்சயம் வெல்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக