சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் 68 கோடி பேர் திரண்டுள்ளனர் - நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் உரை
நெல்லையில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், விசிக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ. வாசுகி, மதிமுக.வின் மல்லைலை சத்தியா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டத்தில் 68 கோடி மக்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு பெரும்பான்மை கூட்டம் இந்த மத்திய அரசை நோக்கி திரும்பியுள்ளது. ஒரு போதும் இந்தப் போராட்டம் தோல்வியடையாது.
இந்த கருப்பு சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும் என்பதே, இந்தப் போராட்டத்தின் முடிவாக இருக்கும். நம்முடைய அண்டை மாநிலங்கள் எல்லாம் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. குறிப்பாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதற்கெதிராக தொடர்ந்து போராடியும் வருகிறார். அதற்காக நாம் அவரை பாராட்டுவோம் என்றார்.
தமிழகமும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லை யென்றால் இந்தப் போராட்டம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும். தொடர் இருப்பு போராட்டங்கள் அதிகரித்துக் கொண்ட செல்லும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக