திங்கள், 16 மார்ச், 2020

சமையல் எரிவாயு விலை காங்கிரஸ் ஆட்சியில் 350 லிருந்து மோடி ஆட்சியில் ஏறக்குறைய 1000 ரூபாய்க்கு வந்துவிட்டது. - செ.ஜோதிமணி


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது கூட சமையல் எரிவாயு சிலிண்டர் 350 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது.

 டீசலை விவசாயிகள் பயன்படுத்துவதால் விலை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலுக்கும்,டீசலுக்கும் 20 ரூபாய் வித்தியாசம் இருக்கும்.  இப்பொழுது டீசலும்,பெட்ரோலும் ஏறக்குறைய ஒரே விலைக்கு விற்கிறது.  சமையல் எரிவாயு விலை காங்கிரஸ் ஆட்சியில் 350 லிருந்து மோடி ஆட்சியில் ஏறக்குறைய 1000 ரூபாய்க்கு வந்துவிட்டது. 

மக்கள் பணமதிப்பு நீக்கம்,வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ,கடும் பொருளாதார வீழ்ச்சியால்( மோடி அரசின் சாதனைகள்!) கடும் பொருளாதார நெருக்கடியில் அவதிப்படுகிறார்கள்.

இந்த சூழலில் இன்று உலக அளவில் கச்சா எண்ணெய்  விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை அரசு மக்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டும். பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை அரசு பாதிக்கும் கீழாக குறைக்க முடியும். 

அப்படி குறைத்தால் மக்கள் ஓரளவேனும் மூச்சுவிட முடியும். ஆனால் மக்கள் மீது சிறு துளியும் இரக்கமற்ற மோடி அரசு  பெட்ரோல்,டீசலுக்கு மேலும் 3 ரூபாய் வரி விதித்துள்ளது. இது பொதுமக்களை வஞ்சிக்கும் செயல். 

மோடி/ பிஜேபி  இந்துக்களின் காவலன் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். ஆனால் உண்மையான லட்சணம் இதுதான்.

பொருளாத வீழ்ச்சி,விலைவாசி உயர்வு, மக்களை கொடுமைப்படுத்துவதை மறைக்கத்தான் இந்த 'இந்து' முகமூடி. நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் மதத்தின் பெயரால் மோடி அரசின் தோல்வி மறைக்கப்படும். 

ஏற்கனவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் பொருளாதாரம் விரைவில் மோடியால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். நமது மட்டுமல்ல நமது குழந்தைகளில் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். 

சாதாரண மக்களுக்கு பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை குறைக்க முன்வராத மோடி அரசு அம்பானி,அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு  மட்டும் எப்படி 5 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி  செய்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக