காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூலை, 2022

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.- கே.எஸ்.அழகிரி

 தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலிலும் பா.ஜ.க. மீது மக்கள் கடும் சினத்துடன் உள்ளனர். இதனால், தமிழக மக்களிடம் பா.ஜ.க. செல்கிற போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. 

வெள்ளி, 8 ஜூலை, 2022

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது.- கே.எஸ்.அழகிரி


 பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள். 

புதன், 6 ஜூலை, 2022

தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். - கே.எஸ். அழகிரி


 தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதால் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி மேல் வெற்றியை மக்கள் வழங்கி வருகிறார்கள். தமிழக பா.ஜ.க.வை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.

திங்கள், 30 மே, 2022

பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதையே மோடி ஆட்சி உறுதி செய்கிறது. - கே.எஸ். அழகிரி


 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30 ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ரூபாய் 5 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் மோடியின் கருப்புப் பண ஒழிப்பினால் கிடைத்த பலனாகும்.

ஞாயிறு, 22 மே, 2022

காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும் வேளை பிறந்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜக.வை வீழ்த்துவோம்.- கே.எஸ்.அழகிரி


 இந்தியாவில் 2 விதமான வடிவமைப்புகள் உள்ளன. ஒன்று கூச்சலிடுவது, மக்களின் குரல்களை ஒடுக்குவது. அதை பாஜக செய்கிறது. மற்றொன்று மக்களின் கருத்துகளை கேட்டறிவது. அதை காங்கிரஸ் செய்கிறது.

இந்தியாவில் உள்ள ஜனநாயகம், சர்வதேச அளவில் மிகுந்த பயனை அளிக்கும் நல்ல விஷயமாக உள்ளது. இந்த உலகத்தின் மைய நங்கூரமாகவே உள்ளது. அது உடைந்தால் இந்த உலகத்துக்கே ஆபத்தாக முடியும். இந்தியா என்பது மக்களுடன் நேரடி தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஆனால், பாஜக.வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்தியாவை ஒரு நிலப்பரப்பாக மட்டுமே பார்க்கிறது. அதனால்தான் ஒரு சிலர் மட்டுமே பலனடையும் வகையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

சனி, 9 ஏப்ரல், 2022

பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். - கே.எஸ்.அழகிரி


 பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து கடுமையான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகி வருகிறார்கள். மேலும் வறுமையில் வாடுகிற மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. 

திங்கள், 4 ஏப்ரல், 2022

இலங்கையில் வாழ்கிற பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - கே.எஸ். அழகிரி


 இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் உணவு தானியங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்றுமதி கடுமையாகக் குறைந்து, இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

செவ்வாய், 29 மார்ச், 2022

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. - கே.எஸ்.அழகிரி


 மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம் என பல்வேறு முனைகளில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் வறுமையின் பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 22 மார்ச், 2022

பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். - கே.எஸ். அழகிரி


 மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரியை 11 முறை உயர்த்தி ரூபாய் 24 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. இதைவிட ஒரு பகற் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை நிர்ணயத்தின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.16, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 967 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதோடு, அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 18 மார்ச், 2022

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து செல்கிற சீரிய முயற்சியாகக் கருதிப் பாராட்டுகிறேன் - கே.எஸ்.அழகிரி


 பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, தமிழக அரசின் கடன் சுமை 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஏறத்தாழ ரூபாய் 3.50 லட்சம் கோடியாகவும் ஆக மொத்தம் கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமையை தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. இதற்கான முழு விவரங்கள் நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து பணிகளைத் தொடங்கி, சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

வெள்ளி, 4 மார்ச், 2022

உக்ரைனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களை பாதுகாப்பதற்கு மோடி அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி


 உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்திய அரசின் தெளிவான அணுகுமுறை இல்லாத காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் இந்தியர்கள் அங்கிருந்து எப்படித் தப்பித்து வெளியேறுவது என்று தெரியாமல் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். அங்கே இருக்கிற இந்தியத் தூதரகம் அவர்களுக்கு குறைவான அவகாசம் வழங்கி அனைவரும் வெளியேறும்படி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது அங்கு இருக்கிற நூற்றுக்கணக்கான மாணவர்களிடையே கடும் கோபத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பாஜக தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது. - கே‌.எஸ்.அழகிரி


 கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக அமைப்புகளான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தமிழக வாக்காளர்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மிக அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக அவதூறு கருத்துகளைக் கூறிவருகிறார்கள். தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது.

திங்கள், 7 பிப்ரவரி, 2022

தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிற ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து, தமிழகமே ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பும் - கே.எஸ். அழகிரி



தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்ற காரணத்தை கூறி, நீர் மட்ட அளவைக் குறைக்க தீவிர முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. 1964 ஆம் ஆண்டு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 155 அடியிலிருந்து 152 அடியாக அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்ட அளவை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. அணையை பலப்படுத்தும் பணி முடிந்ததும் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், இந்த முயற்சிகளுக்கு தடையாக கேரள அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதனால், இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

புதன், 5 ஜனவரி, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல, அமித்ஷா ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதித்து, இழிவுபடுத்தியிருக்கிறார்.- கே.எஸ்.அழகிரி


 தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, மருத்துவ கனவை சிதைத்து வருகிற நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்கள் மனு வழங்க முயற்சி செய்தனர். ஆனால், கொரோனா தொற்றை காரணம் காட்டி குடியரசுத் தலைவர் சந்திக்க மறுத்துவிட்டார். அவரிடம் வழங்க வேண்டிய மனுவை அவருடைய செயலாளரிடம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

சனி, 25 டிசம்பர், 2021

காங்கிரஸ் கட்சியின் வலிமையை முன்னிலைப்படுத்தவும், காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. - கே.எஸ். அழகிரி


 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-வது ஆண்டை நிறைவு செய்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வலிமையை முன்னிலைப்படுத்தவும், காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும். 

வியாழன், 23 டிசம்பர், 2021

மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும். - கே.எஸ். அழகிரி


 மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும்.  பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம்.   

தேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

சனி, 20 நவம்பர், 2021

பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்


பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதற்கு இணையாகக் குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி இதுவரை கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 23 லட்சம் கோடி வரை வசூலித்து மத்திய பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிடக் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

வியாழன், 28 அக்டோபர், 2021

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது.- கே.எஸ்.அழகிரி

 இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஒட்டுக்கேட்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவின்  பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஆரோக்கியமான விவாதம் நடத்த பா.ஜ.க. தயாராக இல்லை. மடியில் கனம் இருப்பதால் இத்தகைய ஜனநாயக விரோதச் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. 

சனி, 16 அக்டோபர், 2021

மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. - கே.எஸ்.அழகிரி


 கொரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார தேக்க நிலையினாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. இத்தகைய விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த எதிர்ப்பை கடுகளவு கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.

புதன், 13 அக்டோபர், 2021

தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து செயல்படுவார்.- கே.எஸ்.அழகிரி


 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.