செவ்வாய், 17 மார்ச், 2020

TNPSC முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்ய முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் - அனிதா ராதாகிருஷ்ணன் MLA


கால்நடை, பால் வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திருச்செந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசிய விவரம்:

“உடன்குடிக்கு வந்துசெல்லும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை 80 படுக்கை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். திருச்செந்தூர் செந்தில் முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாடி கட்டிடமாக தரம் உயர்த்த வேண்டும். கடம்பா குளத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி விவசாயிகள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தொழில் வளத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இஸ்ரோ ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெருகும். தமிழகத்தில் வடக்கும் தேய்கிறது - தெற்கும் தேய்கிறது - தொழில் ரீதியாக எதுவுமே வளரவில்லை. தென் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தென் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. மீன்வளத்துறை அமைச்சர் 4 ஆண்டுகளில் தென் கடலோரப்பகுதி மீனவர்களை எப்போதாவது பார்க்க வந்துள்ளாரா? டிஎன்பிஎஸ்சி முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்ய முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக