செவ்வாய், 17 மார்ச், 2020

'தலைவர் கிரிக்கெட் லீக் போட்டிகளை வரும் 31ம் தேதிவரை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - உதயநிதி ஸ்டாலின்


இளைஞர் அணியின் சார்பில், நம் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடும் வகையில், 'தலைவர் கிரிக்கெட் லீக் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 14ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் எழுச்சியாகத் தொடங்கிய இந்த கிரிக்கெட் போட்டிகளின் புகைப்படங்கள், செய்திகள் பார்த்து மகிழ்ந்தேன்.

அதைத்தொடர்ந்து மண்டல அளவிலான போட்டிகள் மற்றும் சென்னையில் நடைபெறும் அரையிறுதி, இறுதிப்போட்டிகளை நடத்துவதற்கான மைதானங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்கும்வகையில், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் வரும் 31ம் தேதிவரை தள்ளிவைக்கவேண்டும் என்று நம் கழகத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்

அதன்படி, இளைஞர் அணியின் நிகழ்ச்சிகளையும் தள்ளிவைக்கவேண்டியது அவசியமாகிறது. எனவே 'தலைவர் கிரிக்கெட் லீக் போட்டிகளை வரும் 31ம் தேதிவரை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 'கோவிட் - 19 வைரஸின் தாக்கம் குறைந்தது தலைவர் அவர்களின் ஆலோசனையைப் பெற்று போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்தத் தகவலை, அனைத்து கிரிக்கெட் அணிகளின் தலைவர்களிடம் தெரிவித்து, போட்டிகளைத் தள்ளிவைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் 'கோவிட்-19' வைரஸ் குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும், இந்த வைரஸ் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் உங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு விளக்குமாறும். முடிந்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு, கைகளைச் சுத்தப்படுத்தக்கூடிய Handsanitizer-களை வழங்கி உதவுமாறும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக