மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் :
தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை வரவேற்று வழிமொழிகிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமரை வலியுறுத்தியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று வழிமொழிகிறோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக சார்பில் இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம்.












